கிட்னி பேஷன்ட்களுக்கு மெயின் வில்லன் எது தெரியுமா? மாதுளை, வாழைப் பழம் வேண்டாம்: டாக்டர் சௌந்தர்ராஜன்
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் 4 வகை பழங்கள் தான் சாப்பிடலாம்; 2 வகை பழங்களை தொடக் கூடாது; உணவு கட்டுப்பாடு குறித்து டாக்டர் சௌந்தர்ராஜன் கூறும் விளக்கம் இங்கே
நமக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்த பின்னர் என்ன சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக் கூடாது? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
நமது உடலின் முக்கிய கழிவு நீக்க உறுப்பான சிறுநீரகம் செயலிழந்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் சிறுநீரகப் பாதை தொற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும். இப்படியான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம்.
இந்தநிலையில், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உணவு மூலம் வராமல் தடுப்பது எப்படி? வந்த பின்னர் என்ன உணவுகளை சாப்பிடலாம்? எவற்றை சாப்பிடக் கூடாது என குமுதம் யூடியூப் சேனலில் டாக்டர் சௌந்தர்ராஜன் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, கிட்னிக்கான முதல் மருந்து உணவு தான். நோய் முற்றி, பரவாமல் தடுக்க சரியான உணவு முறை அவசியம். சிறுநீரகம் செயலிழந்தவர்கள், டயாலிசிஸ் செல்லாமல் தடுக்க குறிப்பிட்ட உணவுமுறையை கடைபிடிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதச்சத்து, உடலுக்கு தேவையான அளவு உறிஞ்சப்பட்ட பின்னர் யூரியாவாக சிறுநீர் வழியாக வெளியேறும். இந்த யூரியா இரத்தத்தில் கலக்காமல் தடுப்பதே சிறுநீரகங்களின் முக்கிய பணியாகும். எனவே கிட்னி செயலிழக்கும் அபாயத்தில் உள்ளவர்கள், அதிக புரத உணவுகளை செய்யக் கூடாது. இறைச்சி போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்ளக் கூடாது. புரதச்சத்தை குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். சைவ புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
அரிசி, வேகவைத்த காய்கறிகள், கொஞ்சம் பால் பொருட்கள் சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். இறைச்சி வாரத்திற்கு ஒருமுறை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. பொட்டாசியம் அதிகமாவதே சிறுநீரக செயலிழப்புக் காரணம். மாதுளை, வாழைப்பழம், திராட்சை, பேரீட்சை மற்றும் துரித உணவுகளில் பொட்டாசியம் அதிகம். எனவை இவற்றை தவிர்க்க வேண்டும்.
பழங்களில் ஆப்பிள், கொய்யா, அன்னாசி, பப்பாளி ஆகிய 4 பழங்களை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாம். இதுதவிர வேறு பழங்களை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். உப்பு அளவை குறைக்க வேண்டும். எண்ணெய் மிகுந்த உணவுகளை தவிர்ப்பதும் சிறந்தது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.