ஊட்டச்சத்து நிறைந்த இந்த தோசை... வாரம் இருமுறை இப்படி மாவு செய்து சுட்டு பாருங்கள்

சுவையான மற்றும் ஹெல்தியான கம்பு தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். காலை உணவுக்கு இது ஒரு நல்ல காம்பினேஷன் ஆகும்.

சுவையான மற்றும் ஹெல்தியான கம்பு தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். காலை உணவுக்கு இது ஒரு நல்ல காம்பினேஷன் ஆகும்.

author-image
WebDesk
New Update
dosa

கம்பு தோசை செய்வது மிகவும் எளிது. இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். சுவையான கம்பு தோசை டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற மாதிரி எப்படி செய்வது என்று முத்தமிழ் சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்:

கம்பு - 3 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில், 3 கப் கம்பையும், 1 கப் இட்லி அரிசியையும் எடுத்து 4-5 முறை நன்கு கழுவவும். பிறகு, அவற்றை 6 முதல் 8 மணி நேரம் வரை ஊறவைக்கவும். அதேபோல, 1 கப் உளுந்துடன் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து அதையும் கழுவி தனியாக ஊறவைக்கவும்.

ஊறவைத்த பிறகு, ஒரு முறை தண்ணீர் விட்டு கழுவி, கம்பு மற்றும் அரிசி கலவையை தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை தனியாகவும் அரைத்து எடுக்கவும். மாவு இட்லி தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

அரைத்த கம்பு மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். மாவு புளிப்பதற்கு 6 முதல் 8 மணி நேரம் தேவைப்படும். மாவு நன்கு புளித்ததும், வழக்கமாக தோசை சுடுவது போல தோசைக்கல்லில் ஊற்றி சுடவும். கம்பு தோசை நன்கு மொறுமொறுப்பாக வரும்.

சுவையான கம்பு தோசையை கார சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். ஆரோக்கியமான இந்த கம்பு தோசையை வீட்டிலேயே செய்து மகிழுங்கள். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Millets and their amazing benefits Dosa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: