காலையில் எழுந்தவுடனேயே டீ, காபிக்கு பதிலாக குடிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஹெல்த் மிக்ஸ் பற்றி ஜோஸ் தமிழ் ஹெல்த் அண்ட் பியூட்டி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை
கம்பு
கோதுமை
ஜவ்வரிசி
பொட்டுக்கடலை
ஏலக்காய் -5
சுக்கு
செய்முறை
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு கப் அளவிற்கு தனித்தனியாக வறுத்து ஆறவைத்து அரைக்கவும்.
கடைசியாக ஜவ்வரிசி சேர்த்து வறுக்கும்போது 5 ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் சுக்கு எடுத்து மேல் உள்ள தோல் நீக்கி அதை தட்டி எடுத்துக் கொள்ளவும். வறுத்து எடுத்துள்ள அனைத்தையும் தனித்தனியாக ஆற வைக்கவும்.
பின்னர் இவை அனைத்தையும் தனித்தனியாக பவுடர் மாதிரி அரைத்து எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் நன்றாக சலித்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து ஈரம் இல்லாத ஒரு கப்பில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
டீ காபிக்கு பதிலாக இதை குடிங்க எலும்பு தேய்மானம் மூட்டு வலி நீங்கி 80 வயதிலும் 20 போல் இருப்பீங்க
இதனை பயன்படுத்தும் முறை: ஒரு கிளாஸில் நாட்டு சக்கரை இரண்டு ஸ்பூன் ஒரு ஸ்பூன் இந்த பவுடர் சேர்த்து சூடான பால் ஊற்றி கலந்து குடிக்கலாம்.
இதனை காலையில் டீ காபிக்கு பதிலாக குடிக்கலாம். இதனை பாலுடன் சேர்க்காமல் கஞ்சு மாதிரியும் காய்ச்சி குடிக்கலாம்.
இதனை குடிப்பதால் கை கால் வலி மூட்டு வலி, மலச்சிக்கல் போன்ற எந்த பிரச்சனையும் இருக்காது.
இதனால் ரத்தம் சுத்தமாகி புது ரத்தம் ஊறும், உடல் சோர்வாகவும் இருக்காது. ஆரோக்கியம் மேம்படும், சருமம் பளபளக்கும், எலும்பு தேய்மானமும் வராமல் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி உடல் சுறுசுறுப்பாகி 80 வயதிலும் 20 வயது போல் உற்சாகமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.