தினமும் ஒரேமாதிரியான உணவு சாப்பிடுவது சற்று சலிப்பாக இருக்கும். அவ்வப்போது ஆரோக்கியம் நிறைந்த புதுபுது ரெசிபிகளை செய்து சாப்பிடுவது ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும். உணவு அனைவருக்கும் பிடித்தமானதாக உள்ளது. அந்தவகையில் சத்தான உணவு சாப்பிடுவது அவசியமாகும். இன்றைய கால சூழலில் துரித உணவு எனப் பல உடல் ஆரோக்கியமற்ற உணவாக இருக்கிறது. வீட்டிலேயே சத்தான மற்றும் சுவையான உணவு செய்து சாப்பிடுவது உகந்தது. அந்தவகையில், முருங்கைக் கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். முருங்கைக் கீரை சப்பாத்தி சர்க்கரை நோய் உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி மாவு - 1 கப்
முருங்கைக் கீரை - 1/4 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 5
மஞ்சள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், முருங்கைக் கீரை மற்றும் பூண்டு ஆகிய மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு அதோடு உப்பு சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் , முருங்கைக் கீரை, பூண்டை மாவு பாத்திரத்தில் போட்டு சிறிது மஞ்சள் சேர்க்கவும்.
இப்போது, அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எப்போதும்போல் சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்துகொள்ளுங்கள். பின் அரை மணி நேரம் ஊற வைத்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் போட்டு எடுத்தால் சூடான முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி. சட்னி எதுவும் சேர்க்காமல் அப்படியே கூட சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil