பூண்டு, மிளகு, சீரகம் ஆகிய எளிய பொருட்களைப் பயன்படுத்தி ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று இங்கு காணலாம். இது ஆரோக்கியமானது மற்றும் செய்வதற்கு எளிதானது. இதனை எப்படி செய்யலாம் என்று கார்த்திஸ் குக்புக் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - 1 கப் அரிசிக்கு
பெரிய பூண்டு பற்கள் - 10
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
மிளகு - 1/2 முதல் 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில், 10 பெரிய பூண்டு பற்களை நன்கு தட்டி தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 3 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் காய்ந்ததும், 1 டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
கடுகு பொரிந்ததும், 1/2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 10 முந்திரிகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இப்போது அடுப்பின் தீயைக் குறைத்து, தட்டிய பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதனுடன் 2 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் காரத்திற்கேற்ப 1/2 முதல் 1 டேபிள்ஸ்பூன் மிளகு மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மிளகு-சீரகப் பொடியை வதக்கிய பூண்டு கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக, ஒரு கிளாஸ் அரிசியில் வேகவைத்த சாதத்தை சேர்த்து, 1/2 டேபிள்ஸ்பூன் தூள் உப்பும் சேர்த்து, மசாலா சாதத்துடன் நன்கு கலக்கும்படி மெதுவாக கிளறவும். இப்போது சூப்பரான பூண்டு மிளகு சீரக சாதம் தயார்! இதை லஞ்ச் பாக்ஸிற்கு எடுத்துச் செல்லலாம்.