குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்வீட் சட்டுன்னு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். அதுவும் அவர்கள் சாப்பிட விரும்பாத நெல்லிக்காயை வைத்தே அந்த ஸ்வீட் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய்
வெல்லம்
இஞ்சி, உப்பு
செய்முறை
தேவையான அளவு நெல்லிக்காய் எடுத்து கழுவி ஈரப்பதம் இல்லாமல் உலற வைத்து பின்னர் அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடம் வைத்தால் போதுமானது.
பின்னர் இதனை நன்கு ஆற வைத்து இதில் உள்ள விதையை மட்டும் நீக்கிவிட்டு சதை பகுதிகளை எடுத்து வைக்கவும். இதனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நறுக்கிய ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து அதில் சிறிது உப்பு போட்டு நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் வெள்ளம், சர்க்கரை அல்லது கற்கண்டு ஏதேனும் ஒன்றை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கிளறி விட்டாலே கரைந்து விடும்.
இனி கிலோ கணக்கில் செஞ்சாலும் பத்தாது இப்படி ஒரு முறை செய்து பாருங்க.
அதை வடிகட்டி கடாயில் ஊற்றி அதனுடன் நெல்லிக்காய் பேஸ்ட்டை சேர்த்து மிதமான சூட்டில் கிளறிவிட்டு ஒரு இரண்டு நிமிடம் மூடி வைத்து மீண்டும் கட்டி விழாமல் கிளற வேண்டும்.
பின்னர் இதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு சுருண்டு வரவேண்டும்.
இதனை ஒரு தட்டில் மாற்றி இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும் காலையில் எடுத்துப் பார்த்தால் மிருதுவாக ஜெல்லி போன்று இருக்கும். இதனை துண்டு துண்டாக போட்டு ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜியில் வைத்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“