உடல் பருமனால் ரொம்ப நாள் அவதிப்பட்டுட்டு இருக்கீங்களா? எதை சாப்பிட்டாலும் வெயிட் குறையல, ஜிம்முக்கு போய் நிறைய ஒர்க் அவுட் பண்ணியும் உடல் குறையாதவங்க உங்க உடற்பயிற்சியோட சேர்த்து இந்த உணவையும் எடுத்துக்கோங்க.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு
உளுத்தம்பருப்பு
வெந்தயம்
உப்பு
ஒரு கப் கேழ்வரகு, கால் கப் உளுத்தம் பருப்பு, 1/2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு நல்லா மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைக்கும்போதே சிறிது உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
இப்போது அந்த மாவ்வை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மூடி போட்டு வைக்க வேண்டும். மாவு புளிச்சு பொங்கி வெளியே வராமல் இருக்க பெரிய பாத்திரத்தில் வைக்க வேண்டும். மாவு புளிச்சு போவதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகலாம். பின்னர் மாவை நன்றாக கலந்து அரைசி மாவுல தோசை ஊற்றும்படியே இந்த மாவிலும் தோசை ஊற்றி சாப்பிடலாம்.
தோசை நல்லா மொறு மொறுனு வரும். குழந்தைகளுக்கு புரதச்சத்து உள்ள உணவு கொடுக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த தோசையை கண்டிப்பா ட்ரை பண்ணலாம். இந்த தோசையை சர்க்கரை தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் உடல் பருமன் குறைக்க நினைப்பவர்கள் சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது வெறும் தோசையை மட்டும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“