இன்றைய சூழலில் இதயம் பலவீனம், மனக் கவலை போன்ற பிரச்சனைகள் நிறைய பேருக்கு இருக்கிறது. எந்த வயதினராக இருந்தாலும் மனக்கவலை அதிகரித்துவிட்டது. இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு மருத்துவர் யோக வித்யா எத்னிக்ஹெல்த்கேர் யூடியூப் பக்கத்தில் அருமையான டிப்ஸ் ஒன்றை கூறுகிறார்.
Advertisment
அதாவது சாலையோரம் கிடைக்கும் குப்பைமேனி கீரையே போதும் மன அழுத்தத்தை குறைத்து இதயத்தை பலமாக்கி எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்வதற்கு என்கிறார்.
இந்த குப்பைமேனி கீரையை வாங்கி வந்தோ அல்லது சாலையோரங்களில் கிடைப்பதை எடுத்து வந்தோ நன்றாக சுத்தம் செய்து விட்டு ஜூஸ் மாதிரி எடுத்துக் கொண்டால் போதும் இதயம் பலமாக இருக்கும் என்கிறார்.
சுத்தம் செய்து வேரோடு அரைத்து ஜூஸ் மாதிரி பிழிந்து குடிக்கலாம். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பதட்டம் பரபரப்பு இல்லாமல் நிம்மதியாகவும் தெளிவாகவும் ஒரு செயலை செய்ய முடியும் என்கிறார்.
Advertisment
Advertisements
அதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த மருந்து பொருளாகவும் குப்பைமேனி உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், சீராக வைத்துக் கொள்ளவும் குப்பைமேனி பயன்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் குப்பைமேனியை ஜூஸாகவோ அல்லது வேறு மாதிரியாகவோ எடுத்து கொள்ளலாம்.
குடல் புழுக்களை நீக்க குப்பைமேனி உதவுகிறது. எனவே குப்பைமேனியை ஜூஸாக அருந்துவதன் மூலம் குடல் புழுக்கள் அனைத்தும் அழிந்து வெளியேறும். இதன் மூலம் குடல் சுத்தமாகும். அதேபோல மருதம் பட்டை, குங்குமப்பூ கசாயமும் குடித்து வந்தால் இதயம் பலமாக இருக்கும் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.