சுவரொட்டியில் வைட்டமின் - சி ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்கள் சுவரொட்டி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், பி12, இரும்பு சத்துக்கள் ஆகியவை உள்ளதால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சுவரொட்டி சாப்பிடுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்கள் சுவரொட்டி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அப்படிப்பட்ட சுவரொட்டியில் வறுவல் செய்வது பற்றி ராம்சன்5922 யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
சுவரொட்டி
மஞ்சள் தூள்
எண்ணெய்
கடுகு
கருவேப்பிலை
பட்டை
லவங்கம்
பெருங்காயம்
இஞ்சி பூண்டு
பச்சை மிளகாய்
தக்காளி
மிளகாய்த்தூள்
உப்பு
கரம் மசாலா
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் சிறந்த மஞ்சள் தூள் போட்டு ஒரு ஆவியில் இந்த சுவரொட்டியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை எடுத்து ஆற வைத்து மேலே ரப்பர் மாதிரி உள்ளவற்றை நீக்கிவிட்டு நறுக்கவும்.
சுவரொட்டி வறுவல் suvarotti varuval recipe in tamil#shorts #shortsvideo#trending#viral #cooking
இப்போது ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பட்டை, லவங்கம், பெருங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், தக்காளி போட்டு தேவையான மசாலாக்களை போடவும்.
மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி நறுக்கிய சுவரொட்டியையும் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
அவ்வளவுதான் மேலே சிறிது கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கினால் சுவரொட்டி வருவல் ரெடியாகிவிடும்.