/indian-express-tamil/media/media_files/2025/03/23/fktrUoIW4xdeMCRRrRCp.jpg)
டாக்டர் ஜெயரூபா
தாமரை மலர் மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு அற்புத மூலிகை. இது இதயத்தையும் மூளையையும் பலப்படுத்தி, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது என்று மருத்துவர் ஜெயரூபா கூறுகிறார்.
உயர் இரத்த அழுத்தம், நினைவாற்றல் குறைவு, மன அழுத்தம் மற்றும் அல்சைமர்(Alzheimer’s) போன்ற பிரச்சினைகளுக்கு நாட்டு மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் ஒரு இயற்கை நிவாரணம் பற்றியும் அதனை எப்படி செய்வது என்றும் மருத்துவர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் தாமரை நீர் எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெண் தாமரை மலர் இதழ்கள் – 4 முதல் 5
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
ஏலக்காய் – 1
பனங்கற்கண்டு
எலுமிச்சை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் ஊற்றி 3-4 தாமரை மலர் இதழ்கள், சீரகம், இஞ்சி, ஏலக்காய் சேர்க்கவும். இதை 5-10 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விடவும்.
நீர் நன்கு கொதித்து வந்ததும், அடுப்பை அணைத்து அரை எலுமிச்சை சாறு பிழியவும். பின்னர் இதில் பனங்கற்கண்டு சேர்க்கலாம், சர்க்கரை நோயுள்ளவர்கள் இதை தவிர்க்கலாம். மற்றவர்கள் தினமும் இதை இரவில் குடிக்கலாம்.
பிரஷ் தாமரை மலர் கிடைக்காதவர்கள், உலர்த்தி வைத்ததோ அல்லது பொடியாக்கி வைத்ததோ பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் தாமரைப் பூ சூரணம் கிடைக்கிறது. இதை தண்ணீரில் கரைத்து குடிக்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்:
இதயத்தசைகளை பலப்படுத்தும்
நரம்பு அழுத்தத்தை சமநிலை படுத்தும்
நினைவாற்றலை அதிகரிக்கும்
மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சினைகளை குறைக்கும்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.