மாதுளை பழம் அதிகபட்ச இரும்பு சத்து தரக்கூடிய ஒரு கனிரகம் ஆகும். மாதுளை பழம் இதனுடைய இனிப்பு தன்மையோடு சேர்ந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான கனிமம் இரும்புச்சத்து ஆகும்.
இன்றைக்கு நிறைய குழந்தைகளுக்கும் நிறைய பெண்களுக்கும் இரத்த சோகை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பா இந்தியா போன்ற நாடுகளில் வளரும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 40 சதவீதமான பெண் குழந்தைகளுக்கு ரத்த சோகை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல நோய்கள் தீவிரமடைவதற்கு ரத்த சோகை ஒரு முக்கியமான காரணம் எனவும் வேறு ஏதாவது ஒரு நோய் இருப்பின் ரத்தசோகை இருக்கும் வரை அந்த நோயை முழுமையாக விரட்ட முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
ரத்தசோகை நமக்கு வராமல் தடுப்பதற்கு பயன் தரக்கூடிய ஒரு பழம் என்றால் அது மாதுளம் பழம் தான். அதனால் மாதுளை பழத்தை வாரம் இருமுறையாவது கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு மாதுளை பழம் அன்றாட உணவில் ஒரு பங்காக இருக்க வேண்டும்.
மாதுளை முத்துக்கள் அல்லது மாதுளை பழச் சாறு எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். மாதுளை பழத்தின் முத்துக்களை நேரடியாக சாப்பிடும்போது அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைத்து விடும்.
மாதுளையை இருக்கக்கூடிய நுண்ணிய விதைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கிறது. அந்த நார்ச்சத்துகளோடு அந்த கனியை சாப்பிடும்போது வெறும் இரும்புச்சத்து மட்டும் கிடைக்காமல் அதில் இருக்கிற நார்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.
இதனால் எளிதாக மலம் வெளியேறும், ரத்த கொழுப்பு நம்ம ரத்த நாளங்கள்ல படியாம தடுக்குறதுக்கு நார்ச்சத்துக்கள் தான் ரொம்ப தேவையாக உள்ளது. வெறும் பழச்சாறு மட்டும் சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும் ஆனால் அதில் இருக்க கூடிய மற்ற சத்துக்கள் நமக்கு கிடைக்காது. எனவே மாதுளம் பழம் ஜூஸ் விட அப்படியே பழமாக சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது.
மாதுளை பழத்தை குழந்தை பருவத்தில் இருந்தே நம் உணவில் ஒரு அங்கமாக எடுத்து கொள்ள வேண்டும். காரணம் இன்றைய உலகத்துல ரொம்ப சவாலாக இருக்கக்கூடிய நோய்களில் ஒன்றான புற்றுநோயை தடுக்க பெரிதும் உதவுகிறது.
கெமிக்கல் நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதே புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் ஆகும். அந்த நோய் வராமல் தடுப்பதற்கு மாதுளை பயன் அளிக்கிறது. காலை உணவில் இரு மாதுளம் பழத்தை எடுத்து கொள்வதன் மூலம் அதில் உள்ள நிறமி சத்துக்கள் நமக்கு பல வகையிலும் பயனளிக்க கூடிய ஒன்றாகும்.
ஒவ்வொரு கனிக்கும் பிரத்யோகமாக உள்ள நிறங்களுக்கு மருத்துவ குணம் இருக்கு. அந்த குணம் தான் அந்த சிவப்பு நிறம். இந்த ஆன்டிஆக்சிடன்ட்னாலதான் புற்றுநோயை தடுக்க முடியும் என இன்றைய அறிவியல் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது.
நம்ம அன்றாட உணவுகளில் மாதுளம் பழத்தை ஏதாவது ஒரு சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இல்ல ஜூஸ் எடுத்து குடிக்கலாம், மாலையில் சிற்றுண்டியாக முத்துக்களாக எடுத்து சாப்பிடலா.
ஆண்களுக்கு விந்தணுக்களினுடைய எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ள இந்த மாதுளை பழம் கருத்தரிப்பு காலத்திலும் பாலூட்டும் காலத்திலும் பெண்களுக்கு இரும்பு சத்து அதிகரிக்க செய்கிறது.
இந்த மாதுளை பழம் சிறு குழந்தையிலிருந்து வயோதிகம் வரைக்கும் பயன்படக்கூடிய ஒரு அற்புதமான பழம். வாரத்திற்கு 2-3 நாட்கள் தொடர்ந்து மாதுளை பழத்தை நம்ம தினசரி உணவில் எடுத்து கொண்டாலே போதும் உடலில் வரும் முக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“