நம் உடலுக்கு புரதம் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. செல்களை குணப்படுத்தவும், செல்கள் சரியாக வேலை செய்யவும் உதவுகிறது. புரதச்சத்து எண்ணற்ற உணவுகளின் வழியாக கிடைக்கிறது.
உடல் எடை, வயது, பாலினம் மற்றும் உடல்நிலையைப் பொறுத்து எவ்வளவு புரதச் சத்துக்கள் தேவை என்பது தீர்மானிக்கப்படுகிறது. புரதத் தேவையை சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். அப்படியாக புரதம் நிறைந்த ஒரு தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான புரோட்டின் சத்து உள்ள அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கவுனி அரிசி
பச்சைப்பயிறு
கொண்டைக்கடலை
துவரம் பருப்பு
கொள்ளு
காய்ந்த பட்டாணி
கருப்பு உளுந்து
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
சீரகம்
உப்பு
செய்முறை
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நன்றாக கழுவி பின்னர் இதனை 8 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் அதனுடன் சிறிது காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மாவை சுமார் 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் மாவை சேர்த்து உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து விடவும். பின்னர் மாவு புளித்து உப்பி வந்ததும் எடுத்து கரைத்து தோசை சுடலாம்.
இந்த மாவை இரண்டு நாளில் சமைத்து சாப்பிட்டு விட வேண்டும். நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தக்கூடாது. அவ்வப்போது ஃப்ரிட்ஜில் வைத்தும் கொள்ளலாம். காலை நேரங்களில் இந்த மாவில் தோசை சுட்டு சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது. வெங்காய் தோசையாகவும் செய்து சாப்பிடலாம்.
Protein Rich Adai Dosai | ஆரோக்கியமான அடை தோசை
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“