முட்டை பிடிக்காதா? புரோட்டீன் கிடைக்க இந்த 5 உணவுகளை நோட் பண்ணுங்க; டாக்டர் பொற்கொடி
முட்டையை விட புரதச் சத்து அதிகமாக இருக்கும் சில சைவ உணவுகளை மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். இதனை தினசரி சாப்பிடலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
முட்டையை விட புரதச் சத்து அதிகமாக இருக்கும் சில சைவ உணவுகளை மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். இதனை தினசரி சாப்பிடலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
புரதச்சத்து வேண்டுமானால் எப்போது பார்த்தாலும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கே முட்டை சாப்பிடுங்கள், சிக்கன் சாப்பிடுங்கள் உங்களுக்கு புரதச் சத்து நிறைய கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். சைவ உணவு சாபிடுபவர்கள் புரதச் சத்துக்கு என்ன சாப்பிடுவது என்று கேட்பவர்களுக்கு டாக்டர் பொற்கொடி ஒரு அருமையான உணவை பரிந்துரைத்துள்ளார்.
Advertisment
இதில், முட்டையை விட அதிக புரதச் சத்து உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் உடலுக்கு தேவையான புரதச் சத்து பெற முட்டையைவிட அதிகம் புரதச்சத்து உள்ள உணவை பரிந்துரைத்துள்ளார்.
அசைவம் சாப்பிடுபவர்களையே அதிகம் முட்டை சாப்பிடுங்கள் உங்களுக்கு புரதச் சத்து நிறைய கிடைக்கும் என்று கூறும் நிலையில் சைவம் சாப்பிடுபவர்கள் என்ன சாப்பிட்டால் புரதம் கிடைக்கும் என பார்க்கலாம்.
வறுத்த கொண்டைக் கடலை அல்லது உப்புக்கடலை. இதை மேல் தோலுடன் சாப்பிட வேண்டும். இதை அரைத்து பவுடர் பண்ணி, இட்லி, தோசை, சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல புரதச் சத்து கிடைக்கும்.
பச்சைப் பட்டாணி, இதை புரதச்சத்தின் முழு ஆதாரம் என்று சொல்வார்கள். இதில் எல்லா வகையான அமினோ அமிலங்களும் உள்ளது. இதை ஊறவைத்து வறுத்த கொண்டைக் கடலையுடன் சேர்த்து அரைத்து ஸ்மூதி மாதிரி எடுத்துக்கொள்ளலாம்.
கருப்பு உளுந்து, அதிக தரமுள்ள புரதம் உள்ள உணவு. இது அதிகப்படியான புரதச் சத்து, அதிகப்படியான நார்ச்சத்து, அதிகப்படியான கால்சியம் உள்ள ஒரு உணவுப் பொருள். இதை தினமும் கஞ்சி மாதிரி செய்து ஒருவேளை எடுத்துக்கொள்ளலாம்.
வேர்க்கடலை, இது ஒரு நல்ல தாவர உணவு. இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் இ, மெக்னீசியம், இந்த மாதிரியான சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. இதையும் நீங்கள் தினமும் ஒரு கப் அளவு சாப்பிடலாம். இந்த 4 உணவுகளையும் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைக்கும்” என்று டாக்டர் பொற்கொடி அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
எனவே, இந்த நான்கு உணவுகளையும் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைத்து விடும் என்று மருத்துவர் பொற்கொடி அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.