அதிக புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த நட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஒன்றாகும். புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். சுவையுடன் கூடிய புரதம், கால்ஷியம், இரும்பு என சத்துக்கள் நிறைந்த நட்ஸ் வைத்து ஒரு டிஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
சாதம் - 1 கப்
வறுத்த வேர்கடலை
பொட்டுக்கடலை - 5௦ கிராம்
முந்திரிப்பருப்பு
பாதாம் பருப்பு
உலர் திராட்சை
நெய்
உப்பு
பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
மிளகுத் தூள்
கருவேப்பிலை
புதினா
செய்முறை
ஒரு கடாயில் நெய் விட்டு வறுத்த வேர்கடலை, பொட்டுக்கடலை, பாதம் பருப்பு, முந்திரிப்பருப்பு ஆகிய பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
இதில் பச்சை மிளகாய் அல்லது கார மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். சிறிது மஞ்சள் தூள் சேர்த்தால் சுவையும் கூடும், உடலுக்கும் நல்லது. வடித்து வைத்த சாதத்தை இந்த கலவையில் கொட்டி உப்பு போட்டு கிளறவும்.
தேவைப்பட்டால் இதில் சிறிது மிளகுத் தூள், கருவேப்பிலை, புதினா இலை சேர்த்து கிளறவும். இந்த உணவை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எப்போதும் போல ஒரே உணவை கொடுக்காமல் ஊட்டச்சத்து மிகுந்த இந்த நட்ஸ் ரைஸ் உடலுக்கு பலத்தை கொடுக்கும்.
உடல் மெலிந்து ஊட்டம் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு வாரம் இரண்டிலிருந்து மூன்று முறை இந்த உணவை கொடுக்கலாம். உடல் ஊட்டம் பெற்று வளர்ச்சிக்கு உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“