இந்தோனேசியாவில் பெண் எடுத்த பல்லவ மன்னர்... 13-ம் நூற்றாண்டில் கண்டுபிடிப்பு; இட்லிக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கு: சொல்லும் டாக்டர் சிவராமன்

காலை உணவுகளில் மிகவும் பிரபலமாக இருப்பது இட்லி தான். இந்த இட்லி எப்படி உருவானது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

காலை உணவுகளில் மிகவும் பிரபலமாக இருப்பது இட்லி தான். இந்த இட்லி எப்படி உருவானது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
இட்லி

பொதுவாக காலை உணவு என்றாலே இட்லி, தோசை, வடை, பொங்கல் போன்ற உணவுகளே நம் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக இட்லியும் வடையும் ஏன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்றன என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதற்கு டாக்டர் சிவராமன் அவர்கள் வணிக காரணங்கள் காரணமாக இருக்கலாம் என்று பிஹைன்வுட்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். 

Advertisment

மேலும், வடை சங்க இலக்கிய காலத்திலேயே இருந்த உணவு, ஆனால் இட்லி பிற்காலத்தில் அதாவது 14ஆம் நூற்றாண்டில் தான் தமிழ்நாட்டிற்கு வந்தது என்று வரலாற்று தகவல்களை டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

பல்லவ மன்னர் இந்தோனேசியாவிலிருந்து ஒரு பெண்ணை மணந்து வந்ததாகவும், அந்தப் பெண்ணின் தந்தை உணவு கலைஞர்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் அரிசி சார்ந்த உணவுகளைச் செய்து கொண்டிருந்த அவர்கள், இங்கு உளுந்து உணவுகளை சாப்பிட்டவர்களுடன் இணைந்து இட்லி உருவானதாக ஒரு நகைச்சுவையான கருத்தை டாக்டர் சிவராமன் அவர்கள் தெரிவிக்கிறார்.

இட்லி இன்று வரை சிறந்த உணவுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகச் சிறந்த உணவு. ஆனால், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் உறுதியாகவும், இளமையாகவும் இருக்க விரும்பினால் காலை உணவில் இட்லி தோசைக்கு பதிலாக சுண்டல், சூப், முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

Advertisment
Advertisements

அப்படியாக காலை உணவாக பொதுவாக நாம் சாப்பிடும் இட்லி, தோசை போன்ற காலை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடலை உறுதி ஆக்கிக் கொள்ள புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். புரோட்டீன் சத்து குறைவாக இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

சரியான காலை உணவாக, ஒரு கப் சுண்டல் (நிலக்கடலை, சோயா அல்லது  கொண்டைக்கடலை), காய்கறிகள் போட்ட சூப், இரண்டு முட்டை அல்லது அசைவம் சாப்பிடுபவர்கள் தொப்பு, பன்னீர் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

மதிய உணவில், குறைந்த அளவு சாதம் மற்றும் அதிக அளவு காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கசப்புக்கு கருவேப்பிலையும் துவர்ப்புக்கு வாழைப்பூ, வாழைத்தண்டும் எடுத்து கொள்ளலாம்.
 
உணவில் ஆறு சுவைகளும் இருக்க வேண்டும். இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். புரதச்சத்து (புரோட்டீன்) உடலுக்கு மிகவும் அவசியம். ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரோட்டீன் உட்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Idli Recipe Health benefits of eating idlis for breakfast

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: