இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன் முட்டையில்லா கேக் எப்படி தயாரிப்பது என்ற செயல்முறை விளக்கத்துடன், முட்டையில்லா கேக்கின் நன்மைகளை விளக்குகிறார்.
தேவையான பொருட்கள்:
உலர் பழங்கள் - நீல பெர்ரி
உலர் பழங்கள் - குருதிநெல்லி
உலர் திராட்சை
பாதாமி பழம்(ஆப்ரிகட்)
½ கப் ஆரஞ்சு சாறு
1 கப் பேரிச்சம்பழம்
½ கப் பால்
3 இலவங்கப்பட்டை
1 ஏலக்காய்
1 சுக்கு தூள்
ஜாதிக்காய்
⅓ கப் தேங்காய் எண்ணெய்
1 கப் கோதுமை
1 தேக்கரண்டி சோள மலர்
½ தேக்கரண்டி சமையல் சோடா
செய்முறை
ஒரு பவுலில் மேற்குறிப்பிட்ட உலர் திராட்சைகள் நட்ஸ்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து விடவும். ஒரு கப் பேரிச்சம் பழத்தில் பால் ஊற்றி கலந்து விட்டு கொதிக்க விடவும். இதை நன்கு கொதித்து மைய கிடைத்து விடும்.
பின்னர் இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து இலவங்கம், பட்டை, ஏலக்காய், சுக்கு பொடி, ஜாதிக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு தடவை அடித்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கப்பில் பால் அதில் சிறிது வினிகர் சேர்த்து 10 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் ஒரு பவுலில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அதில் தண்ணீர் சிறிது ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழத்தை டிரை ஃப்ரூட்ஸ் கலவையுடன் சேர்த்து கலந்துவிட்டு அதில் சிறிது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும். ஒரு கப் கோதுமை மாவு, சோள மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து அதில் கலந்து விடவும்.
இந்த கலவை கெட்டியாக வரும்போது அதில் பால் வினிகர் கலந்ததை சேர்த்து கலக்கவும். பின்னர் இதில் நம்மிடம் உள்ள அனைத்து வகையான நட்ஸ்களையும் சேர்த்து ஒரு பேக்கிங் கப்பில் நெய் தடவி அதன் மேல் இதை வைத்து மேலே சிறிது நட்ஸ்களையும் சேர்த்து பேக்கிங் செய்து விட்டால் சுவையான கேக் ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“