நைட் தூங்கும் முன் இந்தப் பொடி ஒரு ஸ்பூன்... தொப்பை இருக்குற இடம் தெரியாம கரையும்!
தொப்பையை குறைப்பதற்காக ஒரு பயனுள்ள தகவலை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை பின்பற்றுவதன் மூலம் தொப்பையை குறைக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வயிற்றில் தேவையில்லாத கொழுப்புகள் சேரும் போது தொப்பை உருவாகும் எனக் கூறப்படுகிறது. ஆண், பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஒரு பொடியை தயாரித்து சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்தால் தொப்பை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
முதலில் கால் கப் அளவிற்கு கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் கால் கப் அளவை விட சற்று குறைவாக வெந்தயத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு ஓமம் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதனுள் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வறுக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்கள் இவற்றை நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விடலாம். இவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும். இவ்வாறு அரைத்த பின்னர், பொடியை வேறு ஒரு டப்பாவிற்கு மாற்றி விட வேண்டும்.
ஒரு கிளாஸில் வெதுவெதுப்பான சுடுதண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். சுடுதண்ணீரில் கால் டீஸ்பூன் அளவிற்கு சற்று குறைவாக இந்த பொடியை சேர்த்து கலக்க வேண்டும். இந்த தண்ணீரை இரவு சாப்பிட்டு விட்டு தூங்க செல்வதற்கு முன்பாக குடிக்கலாம். இப்படி குடிப்பதன் மூலம் தொப்பை குறையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இரவு குடிக்க முடியாதவர்கள், காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
நன்றி - Puthumai Samayal & Crafts
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.