தேன் நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்தை அதிகரிக்கும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர இரும்பு சத்து பிரச்சினை உள்ளவர்களுக்கு சரியாகும். வெளியில் தேன் நெல்லிக்காய் என்று விற்பதை வாங்கி உண்ணக்கூடாது.
ஏனென்றால் அவற்றில் அதிகமான சர்க்கரை பாகு சேர்க்கப்படுகிறது.அதனால் தேன் நெல்லிக்காயை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
நெல்லிக்காய் வாங்கி நன்கு கழுவி அதில் ஒரு ஸ்பூன் அல்லது ஊசியை வைத்து சிறு துளைகளை போட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் பனங்கற்கண்டு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் வேக வைத்த நெல்லிக்காயை சேர்க்கவும்.
பின்னர் இரண்டையும் நன்கு காய்ச்சி சாப்பிடலாம். ஒரு நாளுக்கு மேல் இதை வைக்கக்கூடாது. உடனே சாப்பிட்டு விட வேண்டும்.
மற்றொரு முறை
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய்
படிகாரம் (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்)
தண்ணீர்
சிட்ரிக் ஆசிட்
தேன்
சர்க்கரை
செய்முறை:
நெல்லிக்காயை கழுவி ஒரு ஊசியால் குத்திவிட்டு, 2 - 3 நாட்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். குறிப்பாக தினமும் நீரை மாற்றவேண்டும். பிறகு படிகாரத்தை நெல்லிக்காய் மூழ்கும் அளவு தண்ணீரில் கரைத்து, நெல்லிக்காயை அதில் போட்டு கொதிக்கவிடவும்.
5 நிமிடம் வரை கொதிக்க வைத்து பிறகு சாதாரண தண்ணீருக்கு மாற்றிகழுவிக்கொள்ளவும். படிகாரம் கிடைக்காதவர்கள், துணியில் காயை மூட்டையாகக் கட்டி வெந்நீரில்5 நிமிடம் வேகவிட்டு எடுக்கலாம்.
பிறகு சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் ஆசிட் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரிக்கவும். சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் கரையும் வரை கொதித்தால் போதும். இந்தப் பாகில் நெல்லிக்காயை போட்டுஊற விடவும்.
கடைசியில் தேன் சேர்த்து ஊற வைக்கவும். நெல்லிக்காய் தேனில் ஊற ஊற சுவை கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“