Advertisment

ஒரு தீக்குச்சி போதும்… சுத்தமான தேனை கண்டறிய எளிய வழி!

simple tips to check if honey is adulterated in tamil: சுத்தமான தேனை குளிரூட்டும்போது, ​​அது படிகமாக மாறாது. அது முழுவதும் திரவ நிலையில் இருப்பதை நீங்கள் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to check the purity of honey in tamil

How check if the honey is pure or adulterated in tamil

Easy Ways To Check The Purity Of Honey in tamil: கடந்த இரண்டு மாதங்களாக, தேன் விற்கும் நிறுவங்கள் விற்பனை செய்யும் "பிராண்ட் தேன்" தூய்மையானவையா? இல்லையா? என்ற விவாதம் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. உண்மையில், நாட்டின் மிகப்பெரிய பிராண்டுகள் தூய்மை தேர்வில் தோல்வியடைந்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் கூறுவது உண்மை தானா? என்பது நமக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், தேனை உட்கொள்ளும் முன் அதன் தூய்மையை சரிபார்ப்பது அவசியமான ஒன்றாகும்.

Advertisment

தேன் தூய்மையானதா அல்லது கலப்படம் செய்யப்பட்டதா என்பதை நீங்கள் சரிபார்க்க பல வழிகள் உள்ளன. ஆர்கானிக் தேன் பிராண்டான ஸ்வீட்னஸ் ஆஃப் எதிக்ஸின் நிறுவனர் ஆயுஷ் சர்தா, சில குறிப்புகளைப் சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். அவற்றை இங்கு ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

publive-image
  1. சுத்தமான தேனை குளிரூட்டும்போது, ​​அது படிகமாக மாறாது. அது முழுவதும் திரவ நிலையில் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆனால், கலப்படம் செய்யப்பட்ட தேன் கெட்டியாகி, படிகமாக மாறும். அசுத்தமான தேனின் மேல் சர்க்கரையின் வெள்ளை அடுக்கு பிரிக்கப்பட்டு உருவாகி இருப்பதையும் நீங்கள் கவனிப்பீர்கள்.
  2. மூல ஆர்கானிக் தேனின் விஷயத்தில், ஒரு வெள்ளை நுரை உருவாகும். இது இரசாயன பாதுகாப்புகள் இல்லாத ஆர்கானிக் தேனின் அறிகுறியாகும்.
  3. ஒரு தீகுச்சியைத் தேனில் தோய்த்து பற்றவைத்தால் உடனே தீப்பிடிக்கும். அது தீப்பிடிக்கவில்லை என்றால், அது தூய்மையற்ற தேனின் அறிகுறியாகும்.
  4. வினிகர் மற்றும் தேன் கலவையானது சுத்தமான தேனில் இருந்து போலியான தேனைக் கண்டறிய எளிதான ஹேக். இந்தப் பரிசோதனையைச் செய்ய, வினிகர்-தண்ணீரின் கரைசலில் சில துளிகள் தேனைக் கலந்து முயற்சிக்கவும். கலவை நுரை வர ஆரம்பித்தால், அது தேனின் தரம் மாசுபட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
  5. காட்டுத் தேனைப் பொறுத்தவரை, இப்பகுதியில் அதிக ஈரப்பதம் இருப்பதால், தேன் மெல்லியதாகவும், மலையிலிருந்து வரும் தேனைப் போல அடர்த்தியாகவும் இல்லை என்பதை உணர வேண்டியது அவசியம். தேனின் நிலைத்தன்மையை தீர்மானிப்பதில் வானிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட குளிர் காலநிலையில், இது தடிமனாக இருக்கும். அதேசமயம், ஈரப்பதமான வானிலையில், அது மெல்லியதாக இருக்கும். சதுப்புநிலங்கள் நீருக்கடியில் நிரந்தரமாக இருப்பதால், அவை அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி அவற்றின் நிலைத்தன்மையை மெல்லியதாக ஆக்குகின்றன. எனவே, சுத்தமான மலைத்தேன் எப்போதும் மெல்லியதாகவும் திரவமாகவும் இருக்கும்.
publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Food Safety Healthy Food Tamil News 2 Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment