இளநரை பிரச்சனை உள்ளவர்கள் மோருடன் சேர்த்து குடிக்க வேண்டிய முக்கியமான ஒன்றைப் பற்றி மருத்துவர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். இளநரை பிரச்சினை மட்டுமின்றி முடி வளர்ச்சிக்கும் உதவும் என்றும் அவர் கூறுகிறார்.
அதற்கு கெட்டியான தயிர், கருவேப்பிலை இரண்டையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் பெருங்காயத்தூள் சுவைக்கு தேவைப்பட்டால் இந்துப்பு சேர்த்து கரைத்து தினமும் குடித்து வரலாம் என்கிறார்.
தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் நல்ல முடி வளரும். இதில் வைட்டமின் இ, இரும்புச்சத்து, வைட்டமின் சி போன்ற நிறைய சத்துக்கள் இருப்பதால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.. அதேபோல முடி உதிர்வையும் சீக்கிரமாக நிறுத்தி விடும்.
சருமம் அழகும் மேம்படும், தோல் பளபளப்பாகும், தோலில் உள்ள சுருக்கங்கள், முகம், கண்களில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் மறைய உதவி செய்யும்.
மேலும் சரும சுருக்கங்கள் வருவதை தாமதப்படுத்தும். வைட்டமின் ஏ கருவேப்பிலை மோரில் அதிகம் இருப்பதால் கண் பார்வையும் அதிகரிக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வை கூர்மையாகும், மாலைக்கண் நோய் போன்ற சில பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.
HairGrowth Drink to increase Hair Density/இளநரை தடுக்க/ முடி கருகருனு நீளமா வளர/Dr.Mythili
ரத்த சோகை உள்ளவர்களும் இதைத் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த சோகையும் குறையும். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க கருவேப்பிலை மோர் உதவும். உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கும்.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பர சத்து இதில் உள்ளதால் எலும்புகளும் வலுவாக இருக்கும் எலும்பு நோய்கள் வராமல் தடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.