சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்றுவது ரத்த அழுத்தத்தை சீராக பரமாரிப்பது, ரத்தத்தை சுத்தம் செய்வது, ரத்தத செல்கள் உற்பத்தி, எழும்புகளின் நலனை பேணுதல் போன்ற மிக முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.
ஆனால் சிறுநீரக கோளாறுக்கு காரணம் மற்றும் ஆரம்ப நிலை கிட்னி செயல்பாட்டை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் உஷா நந்தினி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டிப்ஸ் 1: உணவில் உப்பை குறைத்து சாப்பிட வேண்டும். அதற்கு பதிலாக இந்துப்பு சேர்த்து கொள்ளலாம்.
டிப்ஸ் 2: பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நீர் காய்கறிகள் சமைத்தோ ஜூஸாகவோ எடுத்து கொள்ளலாம். இவை கிட்னி கழிவுகளை வெளியேற்ற உதவும்.
டிப்ஸ் 3: எப்போதும் காய்கறிகள் வேகவைத்து தண்ணீர் வடித்து சாப்பிட வேண்டும். அல்லது காய்கறிகளை சிறுசிறு தூண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 4 மணி நேரம் நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
Easy ways to kidney detox! | Dr.M.S Usha Nandhini
டிப்ஸ் 4: முக்கியமான மற்றும் கட்டாயம் செய்யக்கூடிய ஒரு பழக்கம் இதுதான். அதாவது மூக்கிரட்டை கீரையை சமைத்து சாப்பிடுதல். அப்படி இல்லை என்றால் அதை பொடியாக்கி நீரில் கலந்தும் குடிக்கலாம்.
பொடி செய்முறை
அதற்கு முதலில் மூக்கிரட்டை கீரையை உலர்த்தி நன்கு பொடி செய்து வைக்கவும். பின் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் 5 கிராம் அளவுக்கு சோம்பு இடித்து போட்டு முக்கால் டம்ளர் அளவுக்கு கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம்.
மேலும் சிறுநீரகம் செயல்பாடு குறைவாக உள்ளவர்கள் கால் டம்ளர் அளவுக்கு கொதிக்க விட்டு எடுத்து குடிக்கலாம். இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.