Chapati recipes in tamil: நம்மில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் உணவுகளில் சப்பாத்திக்கு முக்கிய இடம் உண்டு. இதற்கு இவற்றில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்டு கூறலாம். அந்த வகையில், சப்பாத்தியில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன. மேலும், இவற்றில் வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளது.
நாம் சப்பாத்தி தயார் செய்யும் கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. 120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் நிரம்பியுள்ளது. இந்த அற்புத சப்பாத்தி இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருப்பதத்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை மிகவும் நல்லது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். தவிர, குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவு.
இப்படி பல ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள சப்பாத்தியை எப்படி சாஃப்டாக தாயர் செய்யலாம் என்றும், அவற்றை 2 நாள் வரை அதே சாஃப்ட்டில் இருக்க என்ன டிப்ஸ் என்றும் இங்கு பார்க்கலாம்.

சாஃப்ட் சப்பாத்தி சிம்பிள் டிப்ஸ்
சப்பாத்தி தயார் செய்ய நாம் எப்போதும் போல கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு அகலமான பாத்திரத்தில் மாவு மற்றும் உப்பு சேர்க்கவும்.
பிறகு, மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைய ஆரம்பிக்கவும்.
மாவு பிசையும் போது முடிந்த அளவிற்கு கைகளால் நன்கு அழுத்தி பிசையவும்.
சப்பாத்தி மாவு தயாரானதும், அவற்றில் வெடிப்பு இல்லாத வகையில் உருண்டை பிடித்துக்கொள்ளவும்.
தொடர்ந்து உதிரி மாவில் உருண்டைகளை தொட்டு தேய்க்க ஆரம்பிக்கவும்.
உங்களுக்கு பிடித்த வடிவத்தில் தேய்த்து கொள்ளலாம்.
பிறகு, கல்லை சூடேற்றி சப்பாத்திகளை சேர்க்கவும்.
சப்பாத்தி சுடும் போது அவை ஒரு பக்கத்தில் முட்டையாக வரும் போது அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
அதன் மேற்பரப்பில் எண்ணெய் இட்டு எடுத்துக்கொள்ளவும்.
சப்பாத்தி 2 நாட்கள் வரை அதே சாஃப்ட்டாக இருக்க, அவற்றை ஒரு ஏதாவதொரு டப்பாவில் அடைத்து வைக்கவும். கடைசியாக மூடியை வைத்து மூடும் போது சப்பாத்தியின் மேல் சுத்தமான காட்டன் துணியைக்கொண்டு போர்த்தி மூடி வைக்கவும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil