உளுந்து வேண்டாம்… ரேஷன் அரிசியில் மொறு மொறு தோசை இப்படி செய்து பாருங்க!
crispy dosa recipe in Ration rice in tamil: சாதாரண ரேஷன் அரிசியில் மொறுமொறு தோசையா? என்கிற உங்களுக்கு கேள்வி எழலாம். அந்த கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இந்த ரெசிபியை வழங்கியுள்ளோம்.
crispy dosa recipe in Ration rice in tamil: சாதாரண ரேஷன் அரிசியில் மொறுமொறு தோசையா? என்கிற உங்களுக்கு கேள்வி எழலாம். அந்த கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இந்த ரெசிபியை வழங்கியுள்ளோம்.
Ration rice Dosa recipe in tamil: தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவுகளாக இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை உள்ளன. இட்லி பிரியர்கள் அவை சூடாக இருக்க வேண்டும் என நினைப்பர். அதே வேளையில் தோசை பிரியர்கள் நன்றாக மொறு மொறுவென்று இருக்க வேண்டும் என நினைப்பர். நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்கப்படும் தோசையை சில சட்னிகளுடன் சேர்த்து ருசித்தாலும், அவற்றை நாமே வீட்டில் செய்யும் போது தனி ருசி தான். மேலும் அவற்றோடு வீட்டில் இருக்கும் குழம்பு மற்றும் சட்னி வகைகைகளுடன் சேர்த்து சுவைத்தால் அதன் டேஸ்ட் வேற லெவல் தான்.
Advertisment
இருப்பினும், நம்முடைய வீடுகளில் நாம் சுடும் தோசை சில சமயங்களில் முறுகலாக வராது. அதற்காக நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. மேலும் அப்படியான மொறுமொறு தோசைக்கு அரிசியை மாற்றவும் தேவையில்லை. அதற்கு சாதாரண ரேஷன் அரிசியே போதுமானது. சாதாரண ரேஷன் அரிசியில் மொறுமொறு தோசையா? என்று உங்களுக்கு கேள்வி எழலாம். அந்த கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இந்த ரெசிபியை வழங்கியுள்ளோம்.
இப்போது, ரேஷன் அரிசியில் மொறுமொறு தோசை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
Advertisment
Advertisements
முதலில் ரேஷனில் கிடைக்கும் ரேஷன் அரிசியில் புழுங்கல் அரிசியை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அவற்றில் உள்ள தூசி மற்றும் தும்புகளை சுத்தமாக நீக்கி விட்டு, சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு அலசிக்கொள்ளவும்.
இதன்பிறகு, அந்த அரிசியை சுமார் 6 மணி நேரத்திற்கு, சுத்தமான தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
தொடர்ந்து உளுந்துக்கு பதிலாக ஒரு கப் ரேஷன் அரிசிக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு ஊற வைக்கவும்.
வெந்தயம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும், அதிகம் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.
6 மணி நேரத்திற்கு பிறகு, தண்ணீருடன் வெந்தயத்தை சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் முன்பு ஊற வைத்துள்ள அரிசியையும் தண்ணீரை வடிகட்டி விட்டு சேர்த்து அரைக்கவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம்.
இவை ஓரளவுக்கு தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்த பிறகு, அவற்றை எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
பிறகு இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சுமார் 8 மணி நேரம் தனியாக வைத்துவிட வேண்டும்.
இதன்பின்னர் பார்த்தல் மாவு புளித்து நிறம் மாறி இருக்கும். உளுந்து மாவு போல பொங்கி இருக்காது.
பிறகு அந்த மாவை எடுத்து, தோசை கல் சூடானதும் அவற்றில் ஊற்றவும்.
பின்னர் மாவை சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக வைத்து எடுத்தால், நீங்கள் எதிர்பார்த்த மொறுமொறு தோசை.
இந்த மொறுமொறு தோசைகளுடன் உங்களுக்கு பிடித்த சட்னிகளுடன் ருசிக்கலாம்.