நிறைய சத்துக்கள் நிறைந்த கீரையை சமைக்கும் போது நாம் என்னென்ன கவனிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? கீரையில் அவ்வளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதை சமைக்கும் முறையில் தான் அது நம்மை வந்து சேருவதற்கான வழி உள்ளது.
அப்படி கீரை சமைக்கும்போது நாம் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
கீரையை பருப்பு, புளி போடாமல் வெறும் வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு கடையலாம். சுவையாக இருக்கும். இவற்றை அதிகமாகப் போட்டால் சுவையும் அதிகரிக்கும்.
கீரையுடன் பச்சை மிளகாய் போட்டு சமைத்தாலும், ஒரு காய்ந்த மிளகாயாவது போட்டு தாளித்தால்தான் சுவை அதிகரிக்கும்.
ஆவியில் வேகவைப்பதன் மூலம் கீரைகளில் உள்ள ஊட்டச் சத்துகளை ஓரளவு தக்கவைக்க முடியும். துளி உப்பு சேர்த்த சிறிதளவு வெந்நீரில் கீரைகளைச் சமைக்கலாம்.
கீரைகளில் உள்ள மஞ்சள் சத்து முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதனுடன் மிளகு சேர்த்து சமைக்க வேண்டும்.
கீரையை சமைத்த பிறகும் அது பச்சைப் பசேலென்று இருக்க ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கலாம். சத்தாகவும் இக்கும் நிறமும் மாறாது.
கீரையை அதிக நேரம் வேக விடாமல், சிறிது நேரம் வேகவிட்டு, சூட்டோடு இருக்கும் போதே மத்தைக் கொண்டு கடையவும்.
கீரையை சமைப்பதற்கு முன்பு 3 அல்லது 4 நிமிடங்கள் தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு தண்ணீரை நன்கு வடித்து விட்டு செய்ய வேண்டும் .
கீரையை சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்து சமைக்கு கூடாது. கீரை வேகும் போது மூடியில் இருக்கும் வியர்வை தண்ணீர் மீண்டும் கீரையில் விழாமல் பார்த்து கொள்ளவும்.