/indian-express-tamil/media/media_files/gIPglMNd9dtQD8XQZd3C.jpg)
வாழைத்தண்டை வெறும் மருந்தாகப் பார்க்காமல், அதை ஒரு சத்தான உணவாகப் பார்ப்பது மிகவும் அவசியம். இந்த உணவு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, இது சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. அத்துடன், சளி, இருமல், காது வலி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கும் இது நன்மை பயக்கும். வாழைத்தண்டானது அடிவயிற்றுத் தொப்பையைக் குறைப்பதற்கும் (கரைப்பதற்கும்) பெரிதும் துணைபுரியும்.
வாழைத்தண்டில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது இரத்தத்தைச் சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டதுடன், உடல் பருமனை குறைக்கும் திறனும் மிக்கது. வாரம் மூன்று முறை வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. அத்தகைய ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பொரியலை மிக எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று வீரன்வீடு இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு 1 பெரிய துண்டு
பாசிப்பருப்பு 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்கத் தேவையானவை
எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 10 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைத்தண்டின் தோலை சீவி சுத்தம் செய்து, பின்னர் அதைப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டு கருக்காமல் இருக்க, ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த தண்ணீரை எடுத்து அதில் போடவும். (மாற்றாக, தண்ணீரில் 1 ஸ்பூன் மோர் கலந்தும் பயன்படுத்தலாம்). ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் உளுந்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தபின், தண்ணீரை வடித்து வைத்த வாழைத்தண்டை கடாயில் சேர்த்து கிளறவும். அதனுடன், கழுவி வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மீண்டும் கிளறவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயை மூடி வைத்து, வாழைத்தண்டு மற்றும் பருப்பை வேகவிடவும். நீர் முழுவதும் சுண்டி, வாழைத்தண்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
இப்போது, சுவையான மற்றும் சத்து நிறைந்த வாழைத்தண்டு பொரியல் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us