/indian-express-tamil/media/media_files/2025/02/21/Yl61VHl0V2VLXJllBkdT.jpg)
கிட்னி செயல்பாடு - டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்
சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்றுவது ரத்த அழுத்தத்தை சீராக பரமாரிப்பது, ரத்தத்தை சுத்தம் செய்வது, ரத்தத செல்கள் உற்பத்தி, எழும்புகளின் நலனை பேணுதல் போன்ற மிக முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆனால் சிறுநீரக கோளாறுக்கு காரணம் மற்றும் ஆரம்ப நிலை கிட்னி செயல்பாட்டை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் கார்த்திகேயன் அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புரதத்தை சரியாக வெளியேற்றும் தன்மை குறைவாக இருக்கும் எனக் கூறும் அவர், அதனால் தான் சிறுநீரக கோளாறு இருப்பவர்களை புரதம் கம்மியான அளவு எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நம் ஊரில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதில் சுமார் 70 முதல் 80 சதவீத பங்கு சர்க்கரை நோய்க்கு இருப்பதாகவும், 10 முதல் 20 சதவீத பங்கு இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது எனவும் மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
சிறுநீரக செயல் இழப்பை எப்படி இயற்கையாக சரி செய்யலாம்? kidney failure symptoms foods treatment
சிறுநீரகம் செயல் இழப்பை தடுக்க காய்கறிகளை சிறுசிறு தூண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 4 மணி நேரம் நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். எப்போது எந்த உணவுகளை சமைத்தாலும் அதனை நன்றாக சுத்தம் செய்து மேற்குறிப்பிட்ட முறையில் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.
சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணம் உணவு பழக்கம் தான் என்று மருத்துவர் கூறுகிறார். மேலும் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் உருளைக்கிழங்கு, புளிச்சை கீரை சாப்பிட கூடாது. உப்பை குறைத்து சாப்பிட வேண்டும். மேலும் உப்பையும் குறைத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.