சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் பரவலாக காணப்படும் ஒரு நோயாகும். இதற்கு முக்கிய காரணம் நமது தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் அசைவிரைவான வாழ்க்கை முறையாகும்.
Advertisment
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இதற்கு மருத்துவ சிகிச்சையுடன் பார்ப்பதோடு, உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உருளைக்கிழங்கு ஆரோக்கியமான முறையில் சமைக்கப்பட்டால், அதை தினமும் குறைந்த அளவில் சாப்பிடுவதில் எந்தத் தீங்கும் இல்லை என டாக்டர் கார்த்திகேயன் அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இதை தினமும் உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Advertisment
Advertisements
உருளைக்கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. உருளைக்கிழங்கில் இவ்வளவு ஊட்டச்சத்து நன்மைகள் இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது விரோதியாகும்.
உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடுவதை விட அதை வேகவைத்து சாப்பிடுவது தான் நல்லது. அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிட்டால், உங்கள் எடை அதிகரிக்கக்கூடும்.
உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன, அவை உங்கள் செல்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மூலக்கூறுகள். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு உங்கள் இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்.
வேகவைத்த உருளைக்கிழங்கு தோல் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் சிறந்த மூலமாகும். உங்கள் உணவில் போதுமான பொட்டாசியம் இல்லாவிட்டால், உங்கள் உடல் கூடுதல் சோடியத்தை தக்க வைத்துக் கொள்கிறது, மேலும் அதிகப்படியான சோடியம் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.