மாவு அரைத்த அரை மணி நேரத்தில் இட்லி? ஈஸியா புளிக்க வைக்க இப்படி வழி இருக்கு!
Simple Tips for Idli Batter Fermentation within half an hour Tamil News: புதியதாக அரைத்த இட்லி மாவை அரை மணி நேரத்தில் புளிக்க வைத்து இட்லி தயார் செய்து விடலாம். மற்றும் மொறுமொறு தோசையும் தயார் செய்யலாம்.
Idli batter to ferment in half an hour tips Tamil News: தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி உள்ளது.
Advertisment
கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவுக்கான மாவை தயார் செய்வதில் பலரும் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி தயார் செய்ய உங்களுக்காவே சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.
மாவு அரைத்த அரை மணி நேரத்தில் இட்லி: சிம்பிள் டிப்ஸ்…
Advertisment
Advertisement
புதியதாக அரைத்த இட்லி மாவை அரை மணி நேரத்தில் புளிக்க வைத்து இட்லி தயார் செய்து விடலாம். மற்றும் மொறுமொறு தோசையும் தயார் செய்யலாம்.
இட்லி தயார் செய்வதற்கான மாவை அரைத்ததும், வழக்கம்போல் மாவில் உப்பு கரைத்துக்கொள்ளவும். கையுடைய சூட்டில்தான் இட்லி மாவு புளிக்கும். எனவே, மாவை உங்கள் கையைக் கொண்டு நன்றாக கரைக்கவும்.
இப்போது இட்லி தயார் செய்யத் தேவையான மாவை மட்டும் ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவு புளிப்பதற்கு முன், அவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து விட்டலாம். அவை நீண்ட நாட்களுக்கு புளிக்காமல் அப்படியே இருக்கும்.
புதிதாக அரைத்த இட்லி மாவை புளிக்க வைக்க மூன்று வழிகள் உள்ளது. அதில் முதலாவது வழியாக, அரைத்த புதிய மாவின் மேல் ஒரு தட்டு போட்டு மூடி, வெயிலில் அரை மணி நேரம் வைக்கவும்.
இப்படி வைக்கும்போது, சிறிய சிறிய முட்டைகள் எழும்பி மாவு புளிக்க தொடங்கி விடும். ஆனால் இதற்கு அதிக வெயில் இருக்க வேண்டும். அதேசமயம் இரவு நேரத்தில் மாவு ஆட்டினால் இந்த டிப்ஸ் செட் ஆகாது.
இரண்டாவதாக, ஒரு குக்கரை எடுத்து, அதை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்யவும்.
அதாவது குக்கரில் இருந்து புகை கிளம்பும் வரும் அளவிற்கு சூடு செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது மாவு பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து குக்கருக்கு மேலே மூடி போட்டு விசிலும் போடவும். உள்ளே இருக்கும் காற்று வெளியில் போகாமல் இருக்கத்தான் விசில் என்பதை நினைவில் கொள்ளவும்.
அரை மணி நேரம் குக்கரின் சூட்டிலேயே மாவு உள்ளே இருக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து குக்கருக்கு உள்ளே இருக்கும் மாவை எடுத்துப் பார்த்தால் மாவு லேசாக பொங்கி புளித்து வந்திருக்கும்.
குக்கரை அதிகமாக சூடு செய்துவிட்டு உள்ளே மாவை வைத்தால் அடியில் மாவு வெந்து இருக்கும். எனவே இதை கவனமாக கையாள வேண்டும்.
மூன்றாவது குறிப்பாக, புதியதாக அரைத்த மாவுக்கு மேலே வரமிளகாயை காம்புகளோடு போட வேண்டும். காம்புகள் மாவில் படும்படி இரண்டு அல்லது மூன்று மிளகாய்களை மாவுக்கு மேலே வைத்து மூடி போட்டு விட்டால், மாவு 1 மணி நேரத்தில் நன்றாக புளித்து பொங்கி வரும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றி அந்த சுடுதண்ணீரின் மேல் மாவு கிண்ணத்தை வைத்தால் 1 மணி நேரத்தில் மாவு ஓரளவுக்கு புளித்து பொங்கி வரும் என்பது மற்றொரு குறிப்பாகும்.