Advertisment

இட்லி தான் மிகச் சிறந்த காலை உணவு...இட்லியுடன் வடை கட்டாயம் இருக்க வேண்டும் -டாக்டர் சிவராமன்

காலை உணவுக்கு இட்லியுடன் மெதுவடை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
இட்லி

இட்லியில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா?

காலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி தான் முதல் உணவாக இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், ஆபீஸ் செல்லும் நபர்கள் என பலரும் காலை உணவாக இட்லியை எடுத்துக்கொள்வது வழக்கமானது. இதில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. 

Advertisment

எப்போதும் இட்லியை ஒரு கப் சாம்பார் அல்லது ஒரு சட்னி வகை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. அதிலும் ஆரோக்கியமான தேங்காய், புதினா, கொத்தமல்லி, பிரண்டை சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவது  இன்னும் நன்மை அளிக்கும்.

இட்லிக்கு நிகரான காலை உணவு வேறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் அதில் அவ்வளவு சத்து உள்ளது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இட்லி போன்ற உணவுகள் 1300 க்கு பிறகு தான் உருவானது.

கர்நாடகா, ஆந்திரா, வட மாநிலங்கள், தமிழகங்கள் போன்ற பகுதிகளில் எல்லாம் பெரும்பாலும் பயிர்களை அரைத்து அதை உருட்டி வேக வைத்து சாப்பிட்டார்கள். பின்னர் தான் அதில் அரிசியை கலந்து புளிக்க வைத்து இட்லி என்ற பெயரில் சாப்பிடுவதாகவு கூறினார்.

Advertisment
Advertisement

இட்லியோடு எப்போதும் வடை சேர்த்து சாப்பிடுகிறோம். அதற்கு காரணம் என்ன என்று தெரியுமா? வரலாற்று ரீதியாகவே இட்லியோடு வடை சேர்த்து தான் சாப்பிட்டதாக உள்ளது. இட்லிக்கு முன்னாடி உளுந்தை தான் அரைத்து வேகவைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். ஏனென்றால் அதில் அவ்வளவு சத்து உள்ளது.பின்னர் தான் இட்லி, இட்லியுடன் வடை என உணவு பழக்கம் மாடர்ன் ஆனது.

இட்லியை நீராவியில் வேகவைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது, அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் கிடைக்கும். 

இட்லி வடை COMBODr. Sivaraman speech on Idli & Vada in Tamil | இட்லி தான் மிகச்சிறந்த காலை உணவு

இதிலுள்ள நார்ச்சத்து அஜீரணத்தை போக்க உதவும். தினசரி 4 இட்லிகள் சாப்பிடுவதால் அன்றைய நாளில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும். 

மேலும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால் சர்க்கரை உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனாலும் கவனம் தேவை, அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.  இட்லியில் மேலும் பல சத்துக்களும் உள்ளது. அதனால் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு, கொலஸ்ட்ராலை குறைக்கும், உடல் எடையை குறைக்கும்.

எனவே இட்லியை காலையில் சத்தான சட்னி மற்றும் வடையுடன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Idli Recipe Health benefits of eating idlis for breakfast
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment