Idli recipes in tamil: தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி இருக்கிறது.
கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலர் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லியை தயார் செய்ய உங்களுக்காவே சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.

சாஃப்ட் இட்லி தயார் செய்ய தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 4 கப்,
உளுந்து – 1 கப்
சோயா பீன்ஸ் – 1
பெரிய டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
சாஃப்ட் இட்லி செய்முறை:

முதலில் அரிசியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஆனால் வெந்தயம் மற்றும் சோயா பீன்ஸ் சுமார் 8 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
எல்லா பொருட்களும் சரியான அளவு தண்ணீரில் ஊறிய பின்னர், முதலில் சோயாபீன்சையும் வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் புசுபுசுவென அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளிக்கலாம்.
பின்னர் ஊற வைத்த உளுந்தம் பருப்பை தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இவற்றுடன், முன்னர் அரைத்து வைத்துள்ள சோயாபீன்ஸ் – வெந்தய மாவை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனில் தண்ணீரை ஊற்றி பொங்க பொங்க உளுந்தை ஆட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து அரிசியைப் போட்டு அரைத்துக்கொள்ளவும். இவற்றை, நைசாகவே ஆட்டி அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவோடு சேர்த்து, உங்கள் கையைக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கரைத்து ஒரு மூடி போட்டு மூடவும். அப்படியே மாவு ஆறிலிருந்து ஏழு மணி நேரம் நன்றாக புளிக்கட்டும்.
புளித்து வந்த மாவை கரண்டியை கொண்டு நன்றாக கலந்து கொள்ளவும். அதன் பிறகு வழக்கம் போல் இட்லி தட்டில் மாவை ஊற்றி, நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சாஃப்ட் இட்லி தயார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil