இரத்த கொதிப்பு உள்ளவர்கள் மாத்திரை மருந்துகளுடன் முக்கியமான ஒரு சில உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அது குறித்த சில குறிப்புகளை பற்றி அவர் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறியதாவது,
ஆரம்ப நிலையில் இரத்த கொழுப்பு கூடியிருப்பவர்களுக்கு வெந்தயம் மிகச் சிறந்த மருந்தாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெந்தயத்தில் தான் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து என இரண்டும் இருப்பதாக அவர் குறிப்பிடுள்ளார்.
இதில் கரையாத நார்ச்சத்து நம் உடலில் ஜீரணத்திற்கு உதவும். குறிப்பாக கரையாத நார்ச்சத்து நீர்த் தன்மையை உறிந்து கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போல், கரையும் நார்ச்சத்து இரத்தக் கொழுப்பை குறைக்கும் வேலையை செய்யும். எனவே, 5 முதல் 10 கிராம் வரை வெந்தயத்தை எடுத்துக் கொள்ளலாம்.
40 வயதிற்கு மேல் இந்த மூன்று உணவை கட்டாயம் சாப்பிடுங்க| Dr.Sivaraman speech on healthy food for aged
சைவ உணவுகளிலேயே வெந்தயத்தில் தான் அதிகளவு நார்ச்சத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக கீரையில் இருப்பதைக் காட்டிலும் வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெந்தயத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டுமென சிவராமன் கூறுகிறார். வெந்தயத்தைப் போலவே வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகியவற்றையும் நம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, வெங்காயத்தை வேக வைக்காமல் தயிர் பச்சடியாக தினசரி எடுத்துக் கொண்டால் அதன் சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். அவ்வாறு, நாள்தோறும் 10 சின்ன வெங்காயங்களை சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளைப் பூண்டை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது மிகச் சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் சிவராமன் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.