நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும்... முருங்கைக்கீரை கடையல் சிம்பிள் டிப்ஸ் இதுதான்!

நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் முருங்கைக்கீரை கடையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் முருங்கைக்கீரை கடையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
முருங்கை கீரை கடையல்

முருங்கை கீரை கடையல்

முருங்கை கீரை என்றாலே அதன் சத்துக்கள் எண்ணில் அடங்காதவை அவ்வளவு சத்துக்கள் முருங்கை கீரையில் அடங்கியுள்ளது. நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படியாக முருங்கை கீரையின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

Advertisment

நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படியாக முருங்கை கீரையின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம். அவ்வளவு சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை கடையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை
கல் உப்பு
துவரம் பருப்பு
மஞ்சள் தூள்
தக்காளி
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
நல்லெண்ணெய் 
மிளகு
சீரகம்
பூண்டு

Advertisment
Advertisements

செய்முறை

செய்முறை

முதலில் ஒரு மீடியம் சைஸில் இருக்கும் முருங்கைக்கீரை கட்டு எடுத்து சுத்தம் செய்து அதில் சிறிது கல் உப்பை சேர்த்து நன்றாக அலசி கழுவி வைக்கவும். 

அடுப்பில் ஒரு பாத்திரத்தையோ அல்லது குக்கர் வைத்து துவரம் பருப்பை போட்டு கழுவி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் போட்டு முக்கால் பாகம் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முருங்கை கீரை கடையல் | keerai kadaiyal in tamil | Murungai keerai kadaiyal

முக்கால் பாகம் பருப்பு வெந்ததும் அதில் சுத்தம் செய்த முருங்கைக் கீரையை போட்டுக் கொள்ளவும். பிறகு நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இவை அனைத்தும் போட்டு 10 நிமிடம் வேகவிட்டால் கீரையும் பருப்பும் சரியான பக்குவத்தில் வெந்து கிடைக்கும். 

அப்போது அதனை தாளிப்பதற்கு ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டு இவை அனைத்தையும் தாளித்து கீரையில் கொட்டவும். 

இவைகளை தாளித்து இதை அப்படியே கீரையில் கொட்டி ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் தண்ணீரை இதில் ஊற்றி நன்றாக கலந்து, சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

Moringa Leaves Boost Immunity

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: