உடல் சோர்வு, தலைமுடி உதிர்வு? இந்த நோயின் அறிகுறி... வெண்ணெய், மீன் சாப்பிடுங்க: டாக்டர் சகுல்
முன்னர் இருந்த காலத்தில் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கால்சியம் சத்து குறைபாடு இருக்கும். ஆனால், தற்போது குழந்தைகளுக்கு கூட கால்சியம் சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னர் இருந்த காலத்தில் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கால்சியம் சத்து குறைபாடு இருக்கும். ஆனால், தற்போது குழந்தைகளுக்கு கூட கால்சியம் சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக கை, கால், தோள், மற்றும் முதுகு வலி இருப்பவர்கள் மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை கேட்டிருப்பார்கள். கால்சியம் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானத்தின் விளைவாக இது போன்ற வலிகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
Advertisment
அந்த வகையில் கால்சியம் சத்து குறைபாடுக்கான அறிகுறிகள் மற்றும் அதனை போக்குவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர் சகுல் முகுந்தன் தெரிவித்துள்ளார். முன்னர் இருந்த காலத்தில் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கால்சியம் சத்து குறைபாடு இருக்கும். ஆனால், தற்போது குழந்தைகளுக்கு கூட கால்சியம் சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து தேவைப்படும். எனினும், 8 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 1300 மில்லி கிராமும், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு 1200 மில்லி கிராமும் கால்சியம் தேவைப்படும் என்று மருத்துவர் சகுல் கூறுகிறார்.
கால்சியம் சத்து குறைபாட்டை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதன்படி, உடல் சோர்வு, முடி உதிர்வு, தசை பிடிப்பு போன்றவை ஆரம்ப நிலையில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படக் கூடிய அறிகுறிகள். எனவே, இது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சகுல் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
பால், தயிர், மோர், வெண்ணெய் மற்றும் பன்னீர் ஆகிய பொருட்களில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. சிலருக்கு பால் பொருட்களில் ஒவ்வாமை இருக்கும். அவர்கள் சீஸ் சாப்பிடலாம் என்று மருத்துவர் சகுல் அறிவுறுத்துகிறார். இது தவிர அசைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் மீன், நண்டு, இறால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Dr Sagul R Mugunthan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.