இளநரை, பித்தம்... இந்தக் கீரை 45 நாள் சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன்
கரிசலாங்கண்ணி கீரைக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். மேலும், அதனை எத்தனை நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வகையான கீரைகளிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதில் ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கிறது. அதனடிப்படையில் கரிசலாங்கண்ணி கீரையின் நன்மைகள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த மூலிகை என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, வள்ளலார் வணங்கித் தொழுத கீரை என கரிசலாங்கண்ணியை மருத்துவர் சிவராமன் குறிப்பிடுகிறார். வேதாத்ரி மகரிஷியும் கரிசலாங்கண்ணியின் மருத்துவ பயன்கள் குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
கரிசலாங்கண்ணி கீரையை 'தேக ராஜன்' எனவும் கூறுகின்றனர். மேலும், கடுமையான சளி தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு கரிசலாங்கண்ணி தைலம் மருந்தாக பயன்படுகிறது. இது பெரும்பாலும் முடி எண்ணெய்கள், ஷாம்பூகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து 45 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் இளநரை, பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக அமையும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். எனினும், மருத்துவத்திற்கான விதிப்படி இதனை 45 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
உடலுக்கு நல்லது என்பதற்காக அதிக அளவில் எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும், அவை மற்ற சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறும் சிவராமன், சரியான அளவிலேயே இவற்றை உணவாக எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.