தினசரி நாம் சாப்பிடும் உணவு பசிக்காகவும் ருசிக்காகவும் மட்டும் இல்லாமல் புரதம் நிறைந்ததாக இருந்தால் மட்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
நமக்கான பெரிய பற்றாக்குறையான சத்து புரதம் ஆகும். மற்ற நாடுகளில் எல்லாம் புரதம் சத்து அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் புரதச்சத்து என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
அசைவம் சாப்பிடுபவர்களுக்கு புரதம் நிறைய கிடைக்கிறது. அதேபோல சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு புரதத்திற்காக கூடுதல் உணவுகளை தேடி சாப்பிட வேண்டும். இது மாதிரி சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூடுதலாக புரதத்திற்கென பட்டாணி, கேழ்வரகு, சிவப்பு சுண்டல் போன்ற நிறைய பயிர் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே மருத்துவர்கள் ஒரு கிலோவிற்கு 6 கிராம் புரதம் தேவை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் நம் உடலில் ஒரு கிலோ எடைக்கு 6 கிராம் புரதம் என நம் உடலின் எடைக்கு ஏற்றவாறு புரதச்சத்தை கணக்கிட்டு நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் தினசரி சாப்பிடும் உணவில் அவ்வளவு புரதம் நமக்கு கிடைக்கிறதா என்று கேட்டால் அது மிகப்பெரிய கேள்வி குறிதான். ஆனால் நம்முடைய உடலை நோயற்றுப் பாதுகாக்கவும் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கவும் உடலின் செல்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் நம்மை சத்தாக வைத்துக் கொள்ளவும் புரதச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நம் உடலில் தங்கும் கிருமிகள், இல்லை சட்டென ஏற்படும் காயம், அடி இது போன்ற பிரச்சனைகளுக்கு எதிர்ப்பாற்றல் சக்தியை தரக்கூடியது இந்த புரதச்சத்து தான். முட்டை வெள்ளை கரு, பாசிப்பயிறு, சிவப்பு கொண்டை கடலை, சோயா, பால் பன்னீர் போன்ற உணவுகளில் அதிக புரத சத்து உள்ளது.
எனவே இது மாதிரி புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினசரி உணவில் நாம் ஒன்றாக எடுத்துக் கொண்டாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“