ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை? - டாக்டர் சிவராமன் விளக்கம்
ஒரு நாளைக்கு நாம் சாப்பிடும் உணவில் புரதம் எவ்வளவு கிடைக்கிறது என்று தெரியுமா? தினசரி நாம் புரதம் நிறைந்த உணவுகளை தான் சாப்பிடுகிறோமா என்பது குறித்து மருத்துவர் சிவராமன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
ஒரு நாளைக்கு நாம் சாப்பிடும் உணவில் புரதம் எவ்வளவு கிடைக்கிறது என்று தெரியுமா? தினசரி நாம் புரதம் நிறைந்த உணவுகளை தான் சாப்பிடுகிறோமா என்பது குறித்து மருத்துவர் சிவராமன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
மனிதர்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதச் சத்து இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுரை கூறுகின்றனர். ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமிடுவது புரதச் சத்து என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவற்றை எந்த அளவில் எடுத்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தினசரி நாம் சாப்பிடும் உணவு பசிக்காகவும் ருசிக்காகவும் மட்டும் இல்லாமல் புரதம் நிறைந்ததாக இருந்தால் மட்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மற்ற நாடுகளில் எல்லாம் புரதம் சத்து அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் புரதச்சத்து என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
அசைவம் சாப்பிடுபவர்களுக்கு புரதம் நிறைய கிடைக்கிறது. அதேபோல சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு புரதத்திற்காக கூடுதல் உணவுகளை தேடி சாப்பிட வேண்டும். இது மாதிரி சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூடுதலாக புரதத்திற்கென பட்டாணி, கேழ்வரகு, சிவப்பு சுண்டல் போன்ற நிறைய பயிர் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
பொதுவாகவே மருத்துவர்கள் ஒரு கிலோவிற்கு 6 கிராம் புரதம் தேவை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் நம் உடலில் ஒரு கிலோ எடைக்கு 6 கிராம் புரதம் என நம் உடலின் எடைக்கு ஏற்றவாறு புரதச்சத்தை கணக்கிட்டு நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.