நீண்ட நாட்களாக இரத்த சோகையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்போ தினசரி உணவில் சுண்டைக்காயை சேர்த்து கொள்ளுங்கள். ஒரே வாரத்தில் இரத்தசோகையை விரட்ட முடியும்.
சுண்டைக்காய் பச்சை நிறத்தில் குட்டியாக உருளையாக இருக்கும். இதன் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதில் காரக்குழம்பு, பொரியல், துவையல், சாம்பார் என எந்த வகையான உணவு வேண்டுமானாலும் செய்யலாம். இவை உடலுக்கு நன்மையை கொடுக்கிறது.
இந்த சுண்டைக்காய் லேசாக கசப்பு தன்மையை கொடுக்கும். ஆனால் இதில் இல்லாத சத்துக்களே இல்லை அந்த அளவிற்கு அதிக சத்துக்கள் உள்லன. கால்சியம், புரதம், இரும்பு உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகிறது. இந்த சுண்டைக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.
இந்த சுண்டைக்காயில் பினைல்கள், குளோரோஜெனின்கள் உள்ளவை. இவை இரைப்பையில் ஏற்படும் அழற்சி, கணையத்தில் ஏற்படும் புண்களையும் ஆற்றும். இதனால் வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
அத்துடன் இந்த சுண்டக்காயில் நார்ச்சத்தும் இருக்கிறது. இது செரிமானத்தை தூண்டி எடையை குறைக்கும் பொருளாகவும் இருக்கிறது. சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
இதனால் ரத்த சோகை நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். ரத்த சோகை எனப்படும் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களும் சுண்டைக்காயை சாப்பிட்டால் விரைவில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
இதனை சமைத்து உண்ண முடியாதவர்கள் 5 நிமிடத்தில் இதை செய்து சாப்பிட இந்த முறையை பின்பற்றுங்கள்.. ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி சுண்டைக்காயை நறுக்கி கழுவி அதில் சேர்த்து ஒரு 10 நிமிடம் மீடியம் ஃப்லேமில் வைத்து வறுத்து எடுத்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும்போது நெய்யோடு கலந்து சுண்டைக்காயின் கசப்பு தன்மை பெரிதாக தெரியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“