வீட்டில் இட்லி தோசை செய்வதை விட அதற்கு மாவு அரைப்பது தான் கடினம். இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு எப்படி மாவு அரைப்பது என்று தெரியாது. ஆனால் சாஃப்டான இட்லிக்கு ஈசியாக மாவு அரைப்பது பற்றி பிஷண்ட்வுட்ஸ் ஹிட்ஸ் யூடியூப் பக்கத்தில் இனியவன் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
டிப்ஸ் 1: இட்லி தோசைக்கு மாவு அரைப்பதற்கு முதலில் அரிசியை அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இட்லி சுடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உளுந்து ஊற வைத்து அரைத்தால் போதுமானது.
டிப்ஸ் 2: நல்ல வெயில் காலத்தில் சீக்கிரம் மாவு புளித்து விடும் என்ற பயம் இருந்தால் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதற்குள் மாவு பாத்திரத்தை வைத்தால் போதும்.
டிப்ஸ் 3: குளிர்காலத்தில் மாவு புளிக்கவில்லை என்றால் இளநீர் வாங்கி அதில் ஊற்றி கலந்து வைத்தால் போதும் மாவு புளித்து விடும்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 4: இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்து வரும் போது தான் இட்லி ஊற்ற வேண்டும். அப்போ தான் இட்லி ஆவியில் வேகும்.
டிப்ஸ் 5: இட்லி செய்யும் போது பீட்ரூட் இட்லி, கேரட் இட்லி என பல வகையான இட்லிகள் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சுவையும் மாறாமல் இருக்கும்.
இட்லியில் சேர்க்க வேண்டிய காயை நறுக்கி அரைத்து சாறு எடுத்து சேர்க்கலாம். இல்லை காயை துருவி சேர்க்கலாம். அதே மாதிரி மாவில் நட்ஸ் சேர்த்தும் செய்யலாம்.