Dosa Recipe in tamil: தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை வலம் வருகிறது. இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் விரும்பி ருசிக்கப்படும் உணவாக இருக்கிறது. இப்படியான இந்த அற்புத உணவை தயார் செய்யு நாம் முயற்சிக்கும்போதெல்லாம் இந்த சிக்கலை கண்டிப்பாக சந்திக்கிறோம். அதுதான் மாவு காலியாக இருப்பது அல்லது ஒரு தோசை வரும் அளவுக்கு தான் மாவு இருப்பது. இதைப்பார்த்து பதற்றம் அடையும் நாம், அந்த நேரத்தில் ஏதாவதொரு உணவை தயார் செய்து விடுவோம்.
ஆனால், இனிவரும் நாட்களில் இப்படியொரு பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேரிடால் பதற்றம் அடைய வேண்டாம். வெறும் 10 நிமிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த தோசைக்கான தோசை மாவு தயார் செய்து விடலாம். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இன்ஸ்டன்ட் தோசை மாவு தயார் செய்த் தேவையான பொருட்கள்:
ரவை
கோதுமை மாவு
தக்காளி
காய்ந்த மிளகாய்
அரிசி மாவு
உப்பு
எண்ணெய்
சீரகம்
வெங்காயம்
மிளகு தூள்
10 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் தோசை மாவு – சிம்பிள் செய்முறை:
முதலில் தக்காளி, காய்ந்த மிளகாய் 1 கப் ரவை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, அந்த கலவையை பாத்திரல் மாற்றி அதில், 1/2 கப் கோதுமை மாவு, 1/2 கப் அரிசி மாவு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், சீரகம், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலவையை தோசைமாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
இறுதியாக, இந்த மாவை பக்குவமாய் தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும். பிறகு, உங்களுக்கு பிடித்த சட்னிகளுடன் சேர்த்து ருசிக்கலாம்.
வெறும் 10 நிமிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த தோசைக்கான தோசை மாவு தயார் செய்து விடலாம்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil