இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரையை வைத்து முருங்கை கீரை பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த பொடியை இட்லி, தோசை, மதிய நேர சாப்பாட்டுக்கும் பயன்படுத்தலாம். சுவையாக இருக்கும்.
அதனை எப்படி செய்வது என்று டுடேஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை
உளுந்து
கடலை பருப்பு
நிலக்கடலை
காய்ந்த மிளகாய்
தனியா
எள்
சீரகம்
பெருங்காயத்தூள்
புளி
செய்முறை
முருங்கை கீரையை தண்ணீர் விட்டு கழுவி ஈரம் போகு வரை காய வைக்கவும். பின்னர் கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, நிலக்கடலை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
அடுத்ததாக அதிலேயே காய்ந்த மிளகாய், தனியா, எள், சீரகம் போட்டு வறுக்கவும். அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து வறுக்க வேண்டும். அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயத்தூள் சேர்த்து தேவைப்பட்டால் புளி சேர்த்து கலந்து ஆற வைக்கவும்.
ஒரு ஸ்பூன் முருங்கை கீரை பொடி தினம் இப்படி சாப்பிட்டால் எந்த நோயும் வராது | murungai keerai podi
பின்னர் வேறு கடாயில் எண்ணெய் சிறிது சேர்த்து முருனகி இலை போட்டு ஈரம் போகும்வரை மொறுமொறுன்னு வறுக்க வேண்டும். பின்னர் ஆறிய மசாலாக்களை ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
இறுதியாக அதிலேயே கீரையை போட்டு அரைத்து ஆறவைத்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
சாப்பாட்டில் போட்டு சாப்பிடும்போது நெய் சிறிது சேர்த்து கொள்ளலாம்.