பீட்ருட், மாதுளையை விட இரும்புச் சத்து அதிகம்... இந்த 5 பொருள் கிடைச்சா விடாதீங்க: டாக்டர் மைதிலி
பீட்ரூட், மாதுளம் பழத்தை விட இரும்புச் சத்து அதிகமாக இருக்கும் உணவு பொருட்கள் அடங்கிய பட்டியலை மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். அதன் தகவல்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
பீட்ரூட், மாதுளம் பழத்தை விட இரும்புச் சத்து அதிகமாக இருக்கும் உணவு பொருட்கள் அடங்கிய பட்டியலை மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். அதன் தகவல்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ஒரு நபரின் இரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டால், அவர்கள் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அந்த வகையில், இரும்புச் சத்து அதிகமாக இருக்கும் சில உணவுகளை மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
Advertisment
குறிப்பாக, இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் பீட்ரூட் மற்றும் மாதுளம் பழத்தை அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால், அவற்றில் இரும்புச் சத்து குறைவாகவே இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். அதாவது, 100 கிராம் பீட்ரூட்டில் 0.76 மில்லி கிராம் அளவில் தான் இரும்புச் சத்து இருப்பதாக அவர் கூறுகிறார். இதேபோல், 100 கிராம் மாதுளம் பழத்திலும் 0.39 மில்லி கிராம் இரும்புச் சத்து தான் இருக்கிறது.
அந்த வகையில் இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் அத்திப்பழத்தை அதிகமாக சாப்பிடலாம். 100 கிராம் அத்திப்பழத்தில் இருந்து 2 மில்லி கிராம் இரும்புச் சத்து நம் உடலுக்கு கிடைக்கும். இதில் கூடுதலாக நார்ச்சத்தும் இருப்பதால் செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்க இது உதவி செய்கிறது.
ஒரு டீஸ்பூன் கருப்பு எள்ளில் 1.3 மில்லி கிராம் இரும்புச் சத்து இருப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இதேபோல், வேக வைத்த கருப்பு கொண்டை கடலை ஒரு கப் சாப்பிட்டால், அதில் இருந்து 5 மில்லி கிராம் இரும்புச் சத்தை பெறலாம்.
Advertisment
Advertisements
காய்ந்த ஆப்ரிகாட் பழம் ஒரு கப் சாப்பிட்டால், 7.5 மில்லி கிராம் இரும்புச் சத்து நமக்கு கிடைக்கிறது. ஒரு நாளில் நம் உடலுக்கு 8 மில்லி கிராம் அளவில் தான் இரும்புச் சத்து தேவைப்படுவதாக மருத்துவர் மைதிலி குறிப்பிடுகிறார். காளான் வகைகளில் இருந்தும் இரும்புச் சத்து பெறப்படுகிறது.
அதாவது, 100 கிராம் காளானில் 2.7 மில்லி கிராம் இரும்புச் சத்து இருக்கிறது. இவை தவிர ஆட்டிறைச்சி, முட்டை, ஈரல் போன்றவற்றிலும் இரும்புச் சத்து இருக்கிறது. எனவே, இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் இது போன்ற பொருட்களை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.