பேரிச்சம்பழத்தை விட இரும்புச்சத்து அதிகம்... இந்தக் கீரை கிடைச்சா விடாதீங்க: டாக்டர் அருண்
நமது பணிகளை விரைவாக முடிப்பதற்கும், நாம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் இரும்புச் சத்து மிக முக்கியமானது. அதனடிப்படையில், இரும்புச் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
உடல் நலனை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு 15 மில்லி கிராம் இரும்புச் சத்து தேவைப்படுகிறது என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, கீரை வகைகளில் இருந்து நம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்தை சுலபமாக பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அந்த வகையில் பசலைக் கீரை, சிறுகீரை, முருங்கைக் கீரை போன்றவற்றில் இரும்புச் சத்து காணப்படுகிறது. இவ்வாறு 100 கிராம் கீரை வகைகள் சாப்பிடுவதன் மூலம் சுமார் இரண்டரை முதல் மூன்று மில்லி கிராம் அளவிற்கான இரும்புச் சத்தை பெற முடியும். இதேபோல், 100 கிராம் அசைவ உணவுகளிலும் இரண்டரை முதல் மூன்று மில்லி கிராம் இரும்புச் சத்து இருக்கிறது.
சுண்டல் வகைகள், முளைகட்டிய பயிறு வகைகள் ஆகியவற்றில் ஒன்றரை மில்லி கிராம் இரும்புச் சத்து இருக்கிறது. மேலும், முளைகட்டிய மற்ற பயிறு வகைகளில் மூன்று கிராம் இரும்புச் சத்து காணப்படுகிறது. அதன்படி, ஒன்று அல்லது இரண்டு கட்டு கீரைகள், 100 கிராம் அசைவ உணவுகள், முளைகட்டிய சுண்டல் பயிறு வகைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு தேவையான இரும்புச் சத்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவர் அருண் குமார் பரிந்துரைக்கிறார்.
இவற்றை சாப்பிடுவது பேரிச்சம்பழத்தை உட்கொள்வதை விட ஆரோக்கியம் என்று அவர் குறிப்பிடுகிறார். ஏனென்றால், பேரிச்சம் பழத்தில் அதிகப்படியான சர்க்கரை நிறைந்திருக்கிறது. எனவே, பேரிச்சம்பழத்தை விட அதிக நன்மைகள் கொண்ட மற்ற உணவுகள் மூலம் இரும்புச் சத்தை பெறுவது ஆரோக்கியமான வழிமுறை என்று அவர் கூறுகிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.