உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் பலரும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டுள்ளனர். அவர்கள் சுகரைக் குறைக்க காலையில் 20 நிமிஷம், மாலையில் 20 நிமிஷம் நடக்க வேண்டும். அதுமட்டுமின்றி அதோடு சேர்த்து சில ஜூஸ்களையும் எடுத்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
இதுகுறித்து அவர் டெய்ஸி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முக்கியமாக எடுத்து கொள்ள வேண்டிய 4 ஜூஸ் வகைகள் உள்ளன. உடற்பயிற்சி செய்து வந்ததும் ஒரு 20 நிமிடம் கழித்து இந்த ஜூஸ்களை எடுத்து கொள்ளலாம்.
1. சுரைக்காய் ஜூஸ் - அதனுடன் சிறிது இஞ்சி சேர்த்து குடிக்கலாம்.
2. வெள்ளரி ஜூஸ் - இதனுடன் உப்பு சேர்க்கவும்.
3. வெள்ளை பூசணி ஜூஸ் - நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும்.
4. பாதாம் ஜூஸ் - பாதம் 10, பிஸ்தா 10 உலர் திராட்சை 5 ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைய அடித்து குடிக்கலாம்.
இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள உடலில் நல்ல மாற்றத்தை காணலாம் என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
4 best juice for DIABETES ! Check result after three months
காலை உணவை காலை 6.30 மணிக்கு இரவு உணவை 7 மணிக்குள்ளும் சாப்பிட்டுவிடுங்கள். இரவு 7 மணிக்கு மேல் எதையுமே சாப்பிடாதீர்கள் என்கிறார் டாக்டர் ஷர்மிகா. ஒரு மாதம் தொடர்ந்து இந்த ஜூஸ் குடித்து வர மாற்றம் தெரியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.