பாகற்காய் சுவைதான் கசப்பு, ஆனால், அதை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் அவ்வளவு நன்மை. பாகற்காயை சமைத்து சாப்பிடுவதுதான் வழக்கம். அதே போல பாகற்காய் ஃபிரஷ் ஜூஸிலும் அதே அளவுக்கு சத்தானது என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரச்சனா அகர்வால் கூறினார்.
பாகற்காய் அதன் கசப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவதில்லை, ஆனல், பல நன்மைகள் நிரம்பியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
வசந்த் கஞ்ச்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் ருச்சிகா ஜெயின், பாகற்காயின் பல ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி விவரித்தார். பாகற்காயின் சுவை கசப்பாக இருந்தாலும், ஒரு அற்புதமான உணவு. இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. எடையைக் குறைக்க பாகற்காய் உதவுகிறது. அதனால்தான், இது இந்தியாவிலும் பல நாடுகளிலும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக பாகற்காய் சமைத்துதான் சாப்பிடப்படுகிறது என்றாலும், பச்சை பாகற்காய் ஃபிரஷ் ஜூஸ் அதே அளவுக்கு சத்தானது என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரச்சனா அகர்வால் கூறினார். மேலும், பாகற்காய் ஃபிரஷ் ஜூஸின் சில நன்மைகளையும் கூறினார்.
பாகற்காய் ஜூஸில் வைட்டமின் சி
பாகற்காய் ஃபிரஷ் ஜூஸில் ஏராளமாக வைட்டமின் சி இருக்கிறது. இது ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி, மூளை ஆரோக்கியம் மற்றும் திசுக்களை குணப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது: இது உடலில் குளுக்கோஸைக் குறைக்க உதவும் கூறுகளைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது” என்று உணவியல் நிபுணர் ருச்சிகா ஜெயின் கூறினார்.
வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்தது: பாகற்காய் நார்ச்சத்து நிறைந்த உணவு. கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், இது எடையைக் குறைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். “இது நீண்ட காலத்திற்கு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும், எனவே, தேவையற்ற பசியைத் தடுக்கிறது. வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது இரத்தத்தில் உள்ள நச்சுகளை குறைக்கவும், கொழுப்பை குறைக்கவும், குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது” என்று டாக்டர் அகர்வால் கூறினார்.
இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது: “ஆயுர்வேத மருத்துவத்தின்படி, பாகற்காய் ஃபிரஷ் ஜூஸ் கல்லீரலை நச்சுத்தன்மையாக்குவதைத் தடுப்பதோடு கணைய புற்றுநோயைத் தடுக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம்” என்று டாக்டர் அகர்வால் கூறுகிறார். கூறினார்.
பாகற்காய் ஜூஸ் குடிக்க சரியான நேரம் எது?
“பாகற்காய் ஃபிரஷ் ஜூஸ் உணவுக்கு முன் குடிக்க வேண்டும். இருப்பினும், காலை உணவுக்கு முன் ஒரு நாளைக்கு ஒரு முறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்த நேரம்” என்று ருச்சிகா ஜெயின் பரிந்துரைக்கிறார். “பாகற்காய் ஜூஸ் ஒருவர் அதிக அளவு குடித்தால் வயிற்றைக் கலக்கிவிடும் என்பதால் 30 மில்லிக்கு மேல் குடிக்கக் கூடாது” என்று ருச்சிகா ஜெயின் அறிவுறுத்தினார்.
டாக்டர் அகர்வால், “ஒரு நபருக்கு ஒரு பாகற்காய் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்து சாற்றை வடிகட்ட வேண்டும். விதைகள் மிகவும் கடினமாக இருந்தால், அவற்றை எடுத்துவிடுங்கள். பாகற்காய் நடுத்தரமான அல்லது சிறிய அளவு உள்ள நாட்டு வகை பாகற்காய் ஊட்டச்சத்து மற்றும் சுவையில் சிறந்தது.” என்று கூறுகிறார்.
அதே நேரத்தில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பாகற்காய் ஜூஸைத் தவிர்க்க வேண்டும் என்று உணவியல் நிபுணர் ருச்சிகா ஜெயின் கூறினார். “நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்துகளுடன் பாகற்காய் ஜூஸ் குடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது இரத்தச் சர்க்கரைக் குறைவு பண்புகளைக் கொண்டுள்ளது. இது அவர்களின் சர்க்கரை அளவைக் கடுமையாகக் குறைக்கும்.” என்று எச்சரிக்கிறார்.
சுவையாக செய்வது எப்படி?
பாகற்காய் ஜூஸ் மிகவும் கசப்பாக இருக்கும் என்பதால், பலரும் குடிக்க முடியாமல் திணறுவார்கள். அவர்களுக்காக பாகற்காய் ஜூஸில் கசப்பு சுவையை குறைக்க சிறிது வெல்லம் சேர்க்கலாம். “சிறிது ஆப்பிள் ஜூஸ் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம்” என்று உணவியல் நிபுணர் ருச்சிகா ஜெயின் பரிந்துரைக்கிறார்.
பாகற்காய் சுவைதான் கசப்பு, ஆனால், அதை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் அவ்வளவு நன்மை. தினமும் காலையில், வெறும் வயிற்றில் 30 மி.லி பாகற்காய் ஃபிரஷ் ஜூஸ் குடிங்க சுகருக்கு எண்ட் கார்டு போடுங்க. அதே நேர்த்தில், உங்களுடைய மருத்துவரிடமும் ஆலோசனை பெறுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.