கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் அரிப்பு இருக்கும் என்பது உண்மை என்றாலும் அதை செய்யும் முறையில் கவனம் செலுத்தினால் போதும் நமச்சல் உணர்வு இல்லாதவாறு உணவு சமைக்க முடியும்.
கருணைக்கிழங்கை சமைக்கும் போது அதில் சிறிது புளி கரைசல், அரிசி கழுவிய நீர் அல்லது மோர் சேர்க்க அந்த நமச்சல் உணர்வு இருக்காது. கருணைக்கிழங்கை நறுக்கும்முன் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டால் கைகளில் நமச்சல் உணர்வு இருக்காது.
கருணைக்கிழங்கின் 10 நன்மைகள்
மூல நோய்க்கு இயற்கை மருந்து: கருணைக்கிழங்கு மூல நோயைப் போக்கக்கூடிய தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. மூல நோய் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், கருணைக்கிழங்கை தங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம் பலன் பெறலாம். கிராமங்களில் இதனை மூலநோய்க்கான சிறந்த உணவாகவே இன்றும் பயன்படுத்துகிறார்கள்.
மாதவிடாய் பிரச்சனைகள்: மாதவிடாய் காலகட்டத்தில், பல பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் பாதிக்கப்படுகின்றனர், இது அவர்களை உடல் மற்றும் மனரீதியாக சோர்வடையச் செய்கிறது, இதன் விளைவாக ஊட்டச்சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது. இந்த சமயங்களில் பெண்கள் அதிக அளவு கருணைக்கிழங்கு சாப்பிட்டால் அவர்களுக்கு நல்லது. மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் இந்த கருணைக்கிழங்கை சாப்பிடுவடும் உடலுக்கு நன்மை பயக்கும்.
மூளை: மூளை வளர்ச்சிக்கும் குழந்தைகளின் அறிவுத் தன்மை மேம்படவும் உதவும்.
உடல் எடை குறைவுக்கு: கருணைக்கிழங்கைப் பொறுத்தவரை, இது உடல் எடை குறைப்புக்கு உதவும் அற்புதமான உணவுப் பொருளாகும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் பசி கட்டுப்படுத்தப்பட்டு, அதிக உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கருணைக்கிழங்கு ஏற்ற உணவாகும்.
பசியின்மை: ஒவ்வொரு மனிதனும் சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் பசியை மீட்டெடுப்பது ஆரோக்கியத்தின் நல்ல அறிகுறியாகும். சிலர் பசியின்மையால், சரியாக சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். கருணைக்கிழங்கு இந்த பசியின்மை பிரச்சனையை எளிதில் தீர்த்துவிடும்.
இவை எல்லாம் இதன் முக்கிய பண்புகளாகும். மேலும் கருணைக்கிழங்குடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், குடல் புண் நீங்கும். கல்லீரலை ஆரோக்கியப்படுத்தும், மூட்டு வலிகளுக்கு சிறந்தது.இரத்த அழுத்தம் குறையும், இதயத்திற்கு நல்லது, வயிறு, குடல், கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் கருணைக்கிழங்கின் பங்கு அதிகம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“