'இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு' என்பது பழமொழி. அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவுவதில் முதன்மையானதாக 'கொள்ளு' உள்ளது. அதோடு இவை ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கிய ஒன்றாகும். அப்படிப்பட்ட கொள்ளு வைத்து துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு
எண்ணெய்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
பூண்டு
கருவேப்பிலை
தேங்காய் துருவல்
புளி
செய்முறை
ஒரு கடாயில் கொள்ளு போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைத்துக்கொள்ளவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு நன்கு வதக்கவும்.
பின்னர், அவற்றோடு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி அதில் புளி சேர்த்து நன்கு வதக்கி கீழே இறக்கவும். நன்கு ஆறிய பிறகு, வறுத்து வைத்திருந்த கொள்ளு சேர்த்து மிக்சியில் இட்டு துவையலுக்கு ஏற்றார் போல் அரைத்து கொள்ளவும்.
கொள்ளு துவையல்
அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு சுடு சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் கொள்ளு துவையல் ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“