பிறந்தது முதல் பூப்படைதல், மாதவிடாய், கர்ப்பம், குழந்தைப்பேறு, மெனோபஸ் என இறுதி வரை நிறைய உடலியல் மாற்றங்கள் பெண்களுக்கு ஏற்படும் என மருத்துவர் ஜெயஸ்ரீ கூறுகிறார். இதுகுறித்து அவர் மேலும் ஹெல்த் பாஸ்கெட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
40 வயதுக்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் பற்றி அவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 40 வயதிற்கு மேல் மாதவிடாய் இயல்பாக இருக்காது. சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருக்கும். இது ஹார்மோன் மாற்றங்கள் தான்.
40 வயதை கடக்கும்போது நிறைய ஹார்மோன் மாற்றங்கள் பெண்கள் உடலில் உண்டாகும். மாதவிடாய் நிற்கும் நேரத்தில் பெண்கள் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழும். அப்போது பெண்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறையும். அப்போது நாம் அந்த ஈஸ்ட்ரோஜனை உணவு மூலமாக அதிகரிக்க செய்ய வேண்டும்.
40 - 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நின்ற பெண்களுக்கான, சிறந்த ஆலோசனை...!
அதற்கு பொட்டுக்கடலை, ஆழி விதைகள், சோயா உணவுகள் போன்றவற்றை உணவுகளில் சேர்க்க வேண்டும் என ஜெயஸ்ரீ கூறுகிறார். இந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டு ஈஸ்ட்ரோஜன் கட்டுக்குள் வைத்திருக்கும்போது மனது சுறுசுறுப்பாக இருக்கும். அதேபோல புதிய வேலைகளில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளவும். இது நமக்கு மூளையில் நல்ல செல்களை வளர்க்க உதவும்.
அதுமட்டுமின்றி பொட்டுகடலையில், மாங்கனீசு, ஃபோலேட், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி2 மற்றும் பி3, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற பல முக்கிய வைட்டமின்கள் உள்ளன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.