உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் குடிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஜூஸ் பற்றி டாக்டர் மைதிலி அவரது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
தேசி புல் அல்லது எலுமிச்சைப்புல் என்று கூறப்படும் புல்லில் எப்படி டீ வைத்துக் குடித்தால் உடல் எடை குறையும் மேலும் அதன் மற்ற பயன்கள் பற்றியும் அவர் கூறியிருக்கிறார்.
செய்முறைள்: தேசி புல் இரண்டு எடுத்து நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் 2 கிளாஸ் அளவு தண்ணீர் எடுத்து அதில் இந்த புல்லை சேர்த்து 60 மிலி வரும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பானதும் தினமும் குடிக்கலாம்.
காலை உணவுக்கு அரை மணி நேரம் முன் எடுத்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் டீ காபி குடிப்பவர்கள் கூட அதற்கு பதிலாக இதை குடிக்கலாம்.
Advertisment
Advertisements
பயன்கள்: புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும்.
பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோய் தோல் புற்றுநோய் என அனைத்து விதமான புற்று நோய் வராமல் தடுக்கும். பற்களின் ஆரோக்கியம், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் போன்றவை வராமல் தடுக்கும்.
பற்கள் ஈறுகளில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளையும் போக்கும். எந்த வகையான பூஞ்சை தொற்றில் இருந்தும் பாதுகாக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறைக்கும்.
அது மட்டும் இன்றி உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கும். செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.
மன அழுத்தம், சோர்வு போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களும் இதைத் தொடர்ந்து குடித்து வர நல்ல தூக்கம் வரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.