உடல் நலத்திற்கு சிறந்த மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் மக்கான வைத்து சுவையான சூப் செய்வது எப்படி என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம். பொதுவாக இந்த மக்கானவை வறுத்து ஈவினிங் ஸ்நாக்ஸ் மாதிரியே அல்லது வேறு ஏதாவது ரெசிப்பியோ செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதில் சூப் வைத்து சாப்பிட்டு இருக்க மாட்டோம்.
Advertisment
மக்கானவில் சூப் செய்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும் நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த சூப்பை காலையில் குடித்தால் மதியம் வரை பசி இல்லாமல் நிறைவாகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஜவ்வரிசி எடுத்து ஒரு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி வேர்க்கடலை எடுத்து வறுக்கவும். பின்னர் இதில் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மக்கானவை சேர்த்து லேசாக வறுக்கவும்.
அடுத்ததாக அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதே பாத்திரத்தில் நெய் ஊற்றி சீரகம், உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும். இதில் கருவேப்பிலையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலந்து விடவும்.
அடுத்ததாக இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும் உப்பு, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொதிக்க விடவும். பின்னர் இதில் மிளகுத்தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள மக்கானவை மற்றும் பாதாம் முந்திரியையும் சேர்த்து மஞ்சள் தூள் போட்டு கலந்து விடவும்.
அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு கலந்து விடவும். பின்னர் இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு எலுமிச்சை சாறு சிறிது மல்லி தழைகளையும் மேலே தூவி விட்டு இறக்கி குடிக்க ஆரம்பிக்கலாம்.