லஞ்ச் பாக்ஸ் என்றாலே எப்போதும் தக்காளி, தயிர், எலுமிச்சை சாதம் தான் நியாபகம் வரும். ஆனால் கொஞ்சம் மாற்றி வெரைட்டியா ஒரு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சுரைக்காய், தட்டைபயிர் வைத்து கொங்குநாடு ஸ்டைலில் ஒரு லஞ்ச் பாக்ஸ் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த அரிசி - 200 கிராம்
பிளாக் ஐட் பீன்ஸ் - 1/4 டீஸ்பூன்
கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 20 நசுக்கியது
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - தேவையான அளவு
பெருங்காயம் தூள் - 2 சிட்டிகை
தக்காளி - தேவையான அளவு
சுரைக்காய் - 1 கப் (நடுத்தர துண்டுகளாக்கப்பட்டது)
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - சுவைக்க
இஞ்சி எண்ணெய் - சமையலுக்கு
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு அது பொரிந்ததும் கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து தட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகம், கருவேப்பிலை, பூண்டு தட்டி எடுத்து தனியாக வைக்கவும்.
கொங்கு சுவையில் சுரைக்காய் சாதம் | Surakkai Satham Recipe in Tamil | CDK 1342 | Chef Deena's Kitchen
வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் பூண்டு, கருவேப்பிலை, இடித்த மசாலாவையும் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், தனி மிளகாய் தூள் பின்னர் நறுக்கிய சுரைக்காயை அதில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் வேக வைத்து எடுத்து வைத்துள்ள தட்டை பயிரை சேர்த்து கலந்து சிறிது உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
ஒரு கொதி வந்ததும் அதில் ஊற வைத்து உள்ள அரிசியை சேர்த்து அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து வேக வைக்க வேண்டும். முக்கால் பதத்திற்கு வெந்ததும் அதன் மேல் சிறிது நெய் சேர்த்தால் நல்ல மனமாக இருக்கும். பின்னர் இதை எப்போதும் போல தம் போட்டு இறக்கினால் சுரைக்காய் தட்டைப்பயிர் சாதம் ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“